#ஆதித்தியஹ்ருதயம் ஸ்தோத்திரம்
இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வருகிறது. ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர். ராம-ராவண யுத்தத்தை

தேவர்களுடன் சேர்ந்து பார்க்க வந்திருந்த அகத்தியர், அப்போது போரினால் களைத்து, கவலையுடன் காணப்பட்ட ராமபிரானை அணுகி, மனிதர்களிலேயே சிறந்தவனான ராமா போரில் எந்த மந்திரத்தைப் பாராயணம் செய்தால் எல்லா பகைவர்களையும் வெல்ல முடியுமோ அந்த ரகசிய மந்திரத்தை, வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதை உனக்கு
நான் உபதேசிக்கிறேன், கேள் என்று கூறி உபதேசித்தார். முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம்
இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.
ஐந்தாவது ஸ்லோகம்:
ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம்
பொருள்: இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும்
குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது. இதயத்தில் வசிக்கும் பகவானுடைய அனுக்ரகத்தை அளிப்பதாகும்.
முழு ஸ்லோக லிங்க் பொருளுடன் இங்கே உள்ளது https://t.co/Q3qm1TfPmk
சூரியன் உலக இயக்கத்திற்கு மிக முக்கியமானவர். சூரிய சக்தியால்தான் ஜீவராசிகள், பயிர்கள்
வாழ்கின்றன; வளர்கின்றன. கோடை, குளிர், மழை போன்ற பருவமாற்றங்களும்கூட சூரியனாலேயே ஏற்படுகின்றன. அத்தகைய சிறப்புமிக்க சூரியனை நம்மவர்கள் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சூரிய பகவானை வழிபடும் விரதங்களில் முக்கியமானது #ரதசப்தமி ஆகும். இது #சூரியஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது.
அன்றையதினம் சூரியன் பயணிக்கும் தேரை இழுத்துச்செல்லும் 7 குதிரைகளும் ஒரு சேர வடக்கு நோக்கி திரும்பி பயணத்தை தொடங்குகின்றன. இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். கணவனை இழந்தவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் அடுத்து
வரும் பிறவிகளில் இந்நிலை வராது என்று புராணங்கள் சொல்கின்றன. ரதசப்தமி விரதத்தை சூரிய உதயத்தில் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை நைவேத்தியமாக படைத்து பூஜை செய்ய வேண்டும். கோதுமையால் செய்த சப்பாத்தி, சாதம் இவற்றை பசுமாட்டிற்கு கொடுப்பது புண்ணியம். வாசலில் சூரிய ஒளிபடும் இடத்தில் ரதம்
வரைந்து அரிசி, பருப்பு, வெல்லம் படைக்கலாம். இவ்விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆகலாம் என்கிறது புராணம். ரதசப்தமியன்று தொடங்கும் தொழில்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்நாளில் செய்யப்படும் தான, தருமங்களுக்கும் பலமடங்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

More from அன்பெழில்

#ஶ்ரீசக்ரம் ஸ்ரீ சக்கரம் என்பது ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமாகும். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்துவில் அவள் சூட்ஷம வடிவில், ஸ்தூல ரூபமாக அமர்ந்திருக்க, அவளை காரண வடிவத்தினால் அதாவது மந்திர ஒலியினால் பூஜிக்க வேண்டும். பொதுவாக ஸ்ரீ சக்கரம் என்பது  பரமேஸ்வரனும், பார்வதி


தேவியும் இணைந்து அமர்ந்து உள்ள இடமாகும்.  நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஸ்ரீசக்கரம் வெறும் கோடுகளால் ஆனவை என்று எண்ணி விடக் கூடாது. உயர் அட்சரக் கணிதம், சேஷாத்திரக் கணிதம், விஞ்ஞான அறிவு பூர்வமாக பெற்றவர்கள், மற்றும் இந்தத்

துறைகளில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களால் தான் இந்த ஸ்ரீ சக்கரத்தை வரைய முடியும். ஸ்ரீசக்கரம் என்பது வரைபடம். #மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்ரத்தை உயரமாகவும், பெரிய வடிவமாகவும் (3D) செய்தால் அது ஸ்ரீமகாமேரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேரு மலையின் மீது இருந்த ஸ்ரீ புஷ்பதந்தர்

எனும் மாபெரும் சித்த கணமே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு வடிவம் கொடுத்தார் என்றும், அதையே ஆதிசங்கரரின் குருவான #கௌடபாதர் (பதஞ்சலி முனிவரின் சீடர்) மனதில் கிரஹித்து ஸ்ரீ ஆதிசங்கரருக்கு அதை உபதேசித் தருளினார் என்று  புராணச் செய்தி

குறிப்பிடுகிறது. ஸ்ரீ புஷ்பதந்தர் தெய்வீக கணங்களின் சக்தியை கொண்டவர், சிறந்த சிவ பக்தர். #ஶ்ரீஆதிசங்கரர் காஷ்மீரில் தங்கி இருந்தபோதுதான் தான் ஸ்ரீ சக்கரத்தை வடிவமைத்து சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை இயற்றினார். ஒன்பது கட்டுகள் கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம் தான் அம்பாள் உறையும் இடம். சாதாரண
#சதுரகிரி #ஶ்ரீசுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில். மிக விசேஷமான மலை. போய் வந்தவர்களுக்கு இதன் பெருமை புரியும். சித்தர்கள் இன்றும் அருவமாக வாழும் மலை. திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு


64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை ‘சஞ்சீவி மலை' என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய


நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும். பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக


இந்த புல்லை உபயோகித்து உள்ளார்கள். மகாலிங்கம் கோயிலின் வடக்கே ‘ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது. சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும். ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது. சதுரகிரி மலைக்கு


மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை.
இவள் மாமனார் வீட்டில் தினமும் பாலைக் கொடுத்து

More from All

You May Also Like