#சதுரகிரி #ஶ்ரீசுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில். மிக விசேஷமான மலை. போய் வந்தவர்களுக்கு இதன் பெருமை புரியும். சித்தர்கள் இன்றும் அருவமாக வாழும் மலை. திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு

64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை ‘சஞ்சீவி மலை' என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய
நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும். பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக
இந்த புல்லை உபயோகித்து உள்ளார்கள். மகாலிங்கம் கோயிலின் வடக்கே ‘ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது. சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும். ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது. சதுரகிரி மலைக்கு
மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.
சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை.
இவள் மாமனார் வீட்டில் தினமும் பாலைக் கொடுத்து
விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள். வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி பச்சைமாலுக்கு
தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர் அவளுக்கு #சடதாரி என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார்.
மனைவியை பிரிந்த பச்சை மால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும்
சிவதரிசனம் கிடைத்தது. ஒரு நாள் சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம் பசுவின் மடியில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக் கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி
கொடுத்தார். சிவனை அடித்து விட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி, "நீ தேவ லோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகததில் மனிதனாக பிறந்தாய். உன்னை
மீட்டு செல்லவே வந்தேன்” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி #மகாலிங்கம் என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இந்த லிங்கம் லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் மகாலிங்கம் சாய்ந்த நிலையில்
இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம். சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் தான் ஏறுகின்றனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை
யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப் பாறைகள் வருகின்றன. இந்தப் பாறைகளில் மழைக் காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம்.
அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து #கோரக்க_சித்தர் தவம் செய்த குகையும், #பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை
தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளை பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சி செய்யக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை காணும் போது, மெய் சிலிர்க்கும்

More from அன்பெழில்

#ஜெய்ஶ்ரீராம் #Anandashram #ஆனந்தாஷ்ரம் ராம நாம கீர்த்தனை செய்வதற்கு மட்டுமே ஒர் ஆஸ்ரமம் இந்தியாவில் உள்ளது. பலருக்கும் இது தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. 1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. காலை


6 மணி - மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள். அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும். இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம். ஜாதி மத பேதமில்லை, பெரியோர் சிறியோர் குழந்தைகள் அனைவரும்


பங்கு பெறலாம். அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு மட்டுமே! அப்படி முன் பதிவு செய்தால், இந்த ஆஸ்ரமத்தில் தங்க அறை கிடைக்கும், உணவும் கிடைக்கும் இலவசமாக. ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதம ஏற்பாடு இது. தனியாக செல்லலாம், தம்பதியாக


செல்லலாம், நண்பர்களாகச் செல்லலாம். இந்த ஆஸ்ரமத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் தங்கலாம். 1931 முதல் தொடர்ந்து ராம நாம கீர்த்தனைகள் நடைபெற்று வருவதால், இந்த ஆஸ்ரமம் முழுவதும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில், லட்சக்கணக்கான மனிதர்களின் ஜபம் காற்றில் பரவியிருப்பதை உணர முடிகிறது. இங்கே


மூன்று நாட்கள் தங்கியிருப்பதன் மூலமாக நம் நீண்ட நாள் மன உளைச்சல் தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு நிலையான மன உறுதி கூட சீர்குலைந்து போயிருக்கும், அதுவும் சரியாகிவிடும். ஆழ்ந்த மன நிம்மதி பெற விரும்புபவர்கள் இங்கே ஒருமுறை வந்தால் போதும்.
சிலருக்கு ஒரே நாளில் மன அமைதியைப் பெற
மாதந்தோறும் இருமுறை, அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று வளர்பிறை, தேய்பிறைக்குப் பின் வரும் திரயோதசி-13ஆம் நாள் #பிரதோஷம். அத்தினங்களில் மாலை 4.30-6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பல நல்ல விஷயங்கள் தோன்றியபோதும்


அதனுடனே ஆலகால விஷமும் தோன்றியது. அனைத்து உயிர்களையும் காப்பாற்ற சிவபெருமான் அவ்விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட அவர் நீலகண்டனானார். இந்த நேரம் தான் #பிரதோஷகாலம் என்று


வணங்கப்படுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருநடம் புரிந்து காட்சியளிக்கிறார். அப்பொழுது கலைமகள் வீணை வாசிக்க, லட்சுமி தேவி பாடுகிறாள். திருமால் மிருதங்கம் வாசிக்க இந்திரன் புல்லாங்குழல் ஊதுகிறார். பிரம்மதேவர் தாளமிட தேவர்கள் முனிவர்கள் யாவரும்

கைலாயம் வந்து இறைவனை வணங்குகிறார்கள் என்பது புராணம். சிவாலயங்களில் அந்நேரத்தில் சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து பின் தீபாராதனை செய்து வழிபாடு நடக்கிறது.

இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் ஆகியவையால் அபிஷேகமும் பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும்

More from All

ChatGPT is a phenomenal AI Tool.

But don't limit yourself to just ChatGPT.

Here're 8 AI-powered tools you should try in 2023:

1. KaiberAI

@KaiberAI helps you generate beautiful videos in minutes.

Transform your ideas into the visual stories of your dreams with this Amazing Tool.

New features:
1. Upload your custom music
2. Prompt Templates
3. Camera Movements:

Check here

https://t.co/ivnDRf628L


2. @tldview TLDV

Best ChatGPT Alternative for meetings.

Make your meetings 10X more productive with this amazing tool.

Try it now:

https://t.co/vOy3sS4QfJ


3. ComposeAI

Use ComposeAI for generating any text using AI.

It’s will help you write better content in seconds.

Try it here:

https://t.co/ksj5aop5ZI


4. Browser AI

Use this AI tool to extract and monitor data from any website.

Train a robot in 2 minutes to do your work.

No coding required.

https://t.co/nNiawtUMyO

You May Also Like