#ஜெய்ஶ்ரீராம் #Anandashram #ஆனந்தாஷ்ரம் ராம நாம கீர்த்தனை செய்வதற்கு மட்டுமே ஒர் ஆஸ்ரமம் இந்தியாவில் உள்ளது. பலருக்கும் இது தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. 1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. காலை

6 மணி - மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள். அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும். இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம். ஜாதி மத பேதமில்லை, பெரியோர் சிறியோர் குழந்தைகள் அனைவரும்
பங்கு பெறலாம். அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு மட்டுமே! அப்படி முன் பதிவு செய்தால், இந்த ஆஸ்ரமத்தில் தங்க அறை கிடைக்கும், உணவும் கிடைக்கும் இலவசமாக. ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதம ஏற்பாடு இது. தனியாக செல்லலாம், தம்பதியாக
செல்லலாம், நண்பர்களாகச் செல்லலாம். இந்த ஆஸ்ரமத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் தங்கலாம். 1931 முதல் தொடர்ந்து ராம நாம கீர்த்தனைகள் நடைபெற்று வருவதால், இந்த ஆஸ்ரமம் முழுவதும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில், லட்சக்கணக்கான மனிதர்களின் ஜபம் காற்றில் பரவியிருப்பதை உணர முடிகிறது. இங்கே
மூன்று நாட்கள் தங்கியிருப்பதன் மூலமாக நம் நீண்ட நாள் மன உளைச்சல் தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு நிலையான மன உறுதி கூட சீர்குலைந்து போயிருக்கும், அதுவும் சரியாகிவிடும். ஆழ்ந்த மன நிம்மதி பெற விரும்புபவர்கள் இங்கே ஒருமுறை வந்தால் போதும்.
சிலருக்கு ஒரே நாளில் மன அமைதியைப் பெற
முடிகிறது என்பதை கடந்த 10 மாதங்களில் செய்த ஆன்மீக ஆராய்ச்சி முடிவு சொல்கிறது. இந்த அசிரமத்தை ஆரம்பித்தவர் ஸ்வாமி ராமதாஸ். பூஜ்ய மாதாஜி கிருஷ்ணாபாய், சுவாமி சச்சிதானந்தர் அவரின் சிஷ்தர்கள், அவர் பின் இந்த ஆசிரமத்தை நடத்தியவர்கள். ராம நாம ஜப தீக்‌ஷையை தனது தந்தையிடம் பெற்றார்.
தன் வாழ்நாளில் சில கோடி தடவை ஜபித்தவர். அந்த ராம நாம கீர்த்தனை(ஜபம்)

ஓம் ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராமா

இந்த ஆஸ்ரமம் அமைந்திருக்கும் இடம் மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடம். உலகம் முழுவதும் இருந்து ராம பக்தர்கள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு வேறு எங்கும் கிளை ஆசிரமம்
கிடையாது. வெளிநாட்டவர் பலர் வந்து பயன்பெற்று செல்கின்றனர். நமக்கு தான் அருமை தெரியவில்லை. வருபவர்களிடம் எந்த நன்கொடையும் வசூலிக்கப் படுவதில்லை. ராமநாமம் நினைப்போம்!
ராமநாமம் துதிப்போம்!
ADDRESS
Anandashram,
Anandashram P.O., Kanhangad 671531
Dist. Kasaragod, Kerala, India.
Tel: (0467) 2203036/ 2209477
Email: [email protected]

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

More from அன்பெழில்

#கோரக்கர் ஒரு சமுத்திரம். அவரின் குரு ஸ்ரீ #மச்சேந்திரநாதர் ஒருசமயம் சிவபெருமானும், பார்வதிதேவியும் கடற்கரை ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது ராமதாரக மந்திரத்தின் பெருமையைச் சிவபெருமான் உமாதேவியாருக்கு உபதேசம் செய்தார். இதை மிகுந்த கவனத்துடன் ஒரு மீன்குஞ்சு கேட்டுக்


கொண்டிருந்தது. இந்த மகாமந்திரத்தை கேட்ட புண்ணியத்தால் அந்த மீன் குஞ்சு ஒரு மானிடனாக பிறந்தது. இவர் மீனாக இருந்து மானிட வடிவம் பெற்றவர் என்ற செய்தி மக்களுக்கு தெரிந்து இவரை மச்சேந்திரநாதர் என்று அழைக்கலாயினர். இவர் தோற்றத்திலும், செயல்களிலும் முனிவர் போல தோன்றினார். இறைவனின்

கருணையாலும், தோன்றும் போதே ராம தாரக மந்திர உபதேசம் பெற்றதாலும் ஞானதிருஷ்டி உடையவராக விளங்கினார். இறைவனது புகழைப் பாடியபடியே, பிச்சை எடுத்து உண்டு வந்தார், இரவில் இரண்டொரு வீடுகளில் நாராயணா என்பார், கிடைத்தால் உண்பார் இல்லாவிடில் இல்லை. பகலில் நகரங்களின் வழியாக செல்லாமல் வனங்களின்

வழியாகவே தீர்த்த யாத்திரை செல்வார். ஒரு நாள் சிற்றூர் ஒன்றில் உள்ள ஒரு வியாபாரியின் வீட்டின் முன் நின்று நாராயணா என்று கூவினார். உள்ளே இருந்த வணிகனின் மனைவி அன்னத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். வந்தவள் இவரது தோற்றத்தைக் கண்டு இவர் தெய்வாம்சம் பெற்றவர் என்று உணர்ந்தாள். பிறகு,

இவரை நோக்கி, சுவாமி! இந்த வீட்டில் குழந்தை விளையாடும் பாக்கியம் இருக்கிறதா? என்று கேட்டாள். அவளது ஏக்கத்தை உணர்ந்த அவர் அம்மணி, இந்த திருநீற்றை உட்கொண்டால் உங்களது பாக்கியம் நிறைவேறும். திருமாலின் அம்சமாக ஒரு மைந்தன் தோன்றுவான் என்று சொல்லி ஒரு சிட்டிகை திருநீற்றை கொடுத்தார். அதை
#ஶ்ரீசக்ரம் ஸ்ரீ சக்கரம் என்பது ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமாகும். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்துவில் அவள் சூட்ஷம வடிவில், ஸ்தூல ரூபமாக அமர்ந்திருக்க, அவளை காரண வடிவத்தினால் அதாவது மந்திர ஒலியினால் பூஜிக்க வேண்டும். பொதுவாக ஸ்ரீ சக்கரம் என்பது  பரமேஸ்வரனும், பார்வதி


தேவியும் இணைந்து அமர்ந்து உள்ள இடமாகும்.  நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஸ்ரீசக்கரம் வெறும் கோடுகளால் ஆனவை என்று எண்ணி விடக் கூடாது. உயர் அட்சரக் கணிதம், சேஷாத்திரக் கணிதம், விஞ்ஞான அறிவு பூர்வமாக பெற்றவர்கள், மற்றும் இந்தத்

துறைகளில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களால் தான் இந்த ஸ்ரீ சக்கரத்தை வரைய முடியும். ஸ்ரீசக்கரம் என்பது வரைபடம். #மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்ரத்தை உயரமாகவும், பெரிய வடிவமாகவும் (3D) செய்தால் அது ஸ்ரீமகாமேரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேரு மலையின் மீது இருந்த ஸ்ரீ புஷ்பதந்தர்

எனும் மாபெரும் சித்த கணமே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு வடிவம் கொடுத்தார் என்றும், அதையே ஆதிசங்கரரின் குருவான #கௌடபாதர் (பதஞ்சலி முனிவரின் சீடர்) மனதில் கிரஹித்து ஸ்ரீ ஆதிசங்கரருக்கு அதை உபதேசித் தருளினார் என்று  புராணச் செய்தி

குறிப்பிடுகிறது. ஸ்ரீ புஷ்பதந்தர் தெய்வீக கணங்களின் சக்தியை கொண்டவர், சிறந்த சிவ பக்தர். #ஶ்ரீஆதிசங்கரர் காஷ்மீரில் தங்கி இருந்தபோதுதான் தான் ஸ்ரீ சக்கரத்தை வடிவமைத்து சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை இயற்றினார். ஒன்பது கட்டுகள் கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம் தான் அம்பாள் உறையும் இடம். சாதாரண
நமக்குத் தெரிந்த கோவில்களில் சில விஷயங்கள் நமக்கு தெரியாமல் உள்ளன. அவை:
1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று வித ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாக, உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாக, மாலையில்


நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாக காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு -


தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்


பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி,


மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரியும். இவரை சற்று தொலைவில்

More from All

You May Also Like