#குலசேகரஆழ்வார் சேர மன்னரும் சந்திர குலத்தவருமான திருடவிரதற்கு மகனாக, திருவஞ்சிக்குளம் என்னும் இடத்தில் கலி 28வதான பரபவ வருடம் மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் பெருமாளின் மார்பில் இருக்கும் ஸ்ரீகௌஸ்துபத்தின் அம்சம் ஆவார்.

இவர் திருவேங்கடவர் அருளாலே அவர் மீது பக்தி அதிகரித்து அதை அனுபவித்துக் கொண்டே ராஜ்ஜியம் நடத்தினார். அவர் சேர நாட்டை தவிர சோழ பாண்டிய தேசத்தையும் வென்று ஆட்சி புரிந்தார். கொல்லிக்காவலன், கூடல்நாயகன், கோழைக்கோன் என்று வழங்கப்பட்டார். ராமபிரான் மேல் அளவுகடந்த அன்பினால் ஒருமுறை
இராமாயணம் கதை கேட்டுக் கொண்டிருக்கும்போது ராமன் 14,000அரக்கர்களோடு ஜனஸ்தானம் என்னும் இடத்தில் போரிடுவதை கேட்டு எப்படி தனி ஒருவன் மாய அரக்கர்களோடு போராடுவார் என்று தன் சைனியத்தைத் திரட்டிக் கொண்டு அவருக்கு உதவ கிளம்பிவிட்டார். உடனே கதை சொல்பவர் அத்தனை போரையும் வதம் செய்து வென்றார்
என்றதும் சமாதானம் அடைந்தார். அதே போன்று சீதையை ராவணன் அபகரித்து சென்றான் என்று கேட்டவுடன் திரும்பப் படையை திரட்டி கடற்கரை சென்று கடலை கடக்க ஆயத்தமானார். அப்பொழுது இராமபிரானே சீதா தேவியுடன் தோன்றி அவருக்குக் காட்சி அளித்து அவரை சமாதனப் படுத்தினார். கவலையில் ஆழ்ந்த அமைச்சர்கள் கூடி
இத்தகைய குழப்பங்களைத் தவிர்க்க என்ன செய்யலாம் என ஆலோசித்து இதற்கெல்லாம் வைணவ அடியாரோடு இவர் கொண்டிருக்கும் தொடர்பே காரணம் என்ற முடிவிற்கு வந்தனர். தொடர்பைத் துண்டிக்க ஓர் திட்டமும் தீட்டினர். அரண்மனையுள் அரசன் வணங்கும் பெருமாளின் திருவாபரணப் பெட்டியில் இருந்தவற்றுள் மிக அழகான
ஒரு நவரத்தின மாலையை மறைத்து வைத்தனர். அரசனிடம் ஆபரணத்தைத் திருடியது அடியவரே என்று பழி சுமத்தினர். ஒரு குடத்தினுள் நச்சுப் பாம்பொன்றை வைத்து அடியவர்கள் குற்றமற்றவர் எனில் அக்குடத்தில்
கை விட்டு மீள வேண்டும் என்றனர். அரசரோ அடியவரைத் தடுத்து அவர்கள் சார்பாக “பரனன்பர் கொள்ளார்” என்று
கூறி கோவிந்தனை வேண்டிக் குடத்தில் கை விட்டு வெற்றிகரமாக மீண்டார். அமைச்சர்கள்
மனம் வருந்தி மன்னன் தாள் பணிந்து நவரத்தின மாலையை கொடுத்து மன்னிப்பை வேண்டினர். அடியாரை மதிக்காத, பொறுக்காத மக்களிடையே வாழ விருப்பற்ரவராய் தன் மகனுக்கு முடி சூட்டி வைத்து “ஆனான செல்வத்து அரம்பையர்கள்
தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” என்று தன் விருப்பத்திற்குரிய அடியார் குழாத்தோடு
திருவரங்கம் சென்றடைந்தார். அங்கு அணியரங்கத்தம்மானுக்கு பணி செய்து, ஆழ்வார் பெருமாள் திருமொழி என்ற திவ்யப்ரபந்தத்தை பாடியருளினார். மொத்தம் 105 பாடல்கள். ராமாவதாரத்தையும்
கிருஷ்ணாவதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள். நாம சித்தாந்தத்தை வலியுறுத்திய அவர் சமஸ்கிரதத்தில் முகுந்த மாலையை இயற்றியுள்ளார். தெவிட்டாத தேனமுது அது. பெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன.இதிலுள்ள முதற்பாடல் தெய்வபக்தி
உள்ள அத்தனை தமிழ்த்தாய்மார்களும் தங்கள் சேய்களுக்காக பாடியிருக்கக்கூடியது:
மன்னு புகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர் கன்னி நன்மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!
என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ!
https://t.co/9YTs5IyT0O
இவர் தரிசித்த திருத்தலங்கள் திருவரங்கம், திருவேங்கடம், திருவித்துவக்கோடு, அயோத்தி, திருக்கண்ணபுரம், திருசித்திரக்கூடம். திருமலையில் பெருமாளின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோவில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் குலசேகரர்
மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம்:
செடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.

இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.
ஸ்ரீரங்கநாதன் கோவிலில் மற்ற பெருமாள் கோவில்களிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும்படி குலசேகரன் படி என்றே அழைக்கப் படுகிறது. திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே
இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்குகிறது. குலசேகராழ்வாரால் பவித்ரோற்சவ மண்டபம் கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே! திருவரங்கத்தில்தான் தனது அருமை மகளை ரங்கநாதருக்குத் திருமணம் செய்து மகிழ்ந்தார். இன்றும் சேரகுல-வல்லியோடு ரங்கநாதர்
காட்சி தருவதைக் காணலாம். பெரியாழ்வார் போலவே தனது மகளை அரங்கனுக்குத் திருமணம் செய்ததால் இவரும் ‘மாதவன் மாமன்’ எனும் பெருமை பெற்றார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் ‘குலசேகரப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். பல திருத்தலங்களுக்கும் சென்று கடைசியாக
மன்னார்கோயில் திருத்தலம் வந்தார் குலசேகரர். அங்கே பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்வெய்தி அங்கேயே முக்தியடைந்தார். அங்கே அவருக்கு தனி சந்நிதியும் இருக்கிறது. இந்தத் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.
மனவுறுதியை நமக்கு அளிக்க குலசேகராழ்வார் இந்தப் பாசுரத்தில் நமக்கு ஒரு வழியைச் சொல்கிறார்.
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே!

மருத்துவன் கத்தியால் அறுத்து சூடு
போட்டாலும் தன்னுடைய உயிரைக் காப்பாற்றுகிறவன் என்பதால் நோயாளி அந்த மருத்துவனை விரும்புகிறான். வித்துவக்கோட்டம்மானே, நீ மாயத்தால் மீளமுடியாத துயரினைத் தந்தாலும், அது எனக்குச் செய்யும் நன்மையே உன் அருளையே எதிர் நோக்கிக் காத்திருப்பேன் என்கிறார்.
குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்🙏🏾

More from அன்பெழில்

#மஹாபெரியவா
இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில்


உள்ளது. அப்போ பொண்ணப் பெத்தவாளுக்கு?
"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"
கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.

தசாநாம்

பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள். தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்.
ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும் தானம்

ஆகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது. ஒரு நல்ல பெண்ணைப் பெற்றெடுத்து அவளைத் தன் குலத்துக்கு இல்லாமல் வேறு குலத்துக்கு திருமணம் செய்வித்து அந்த குலத்தினுடைய சந்ததியை வ்ருத்தி செய்வதற்கு உதவுகின்றார் என்றால் இந்த தானம் எவ்வளவு பெரிய தானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆண் குழந்தையை

பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்து விடுகிறான். பெண்ணைப் பெற்ற தந்தைக்கு? தனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள், பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்,
தன்னுடன் சேர்த்து 21 தலைமுறைகள், நிலைத்த விஷ்ணு லோகத்தை அடைவதற்கு
மாபெறும் தானமாகிய கன்னிகாதானம் உதவி
#ஜெய்ஶ்ரீராம் #Anandashram #ஆனந்தாஷ்ரம் ராம நாம கீர்த்தனை செய்வதற்கு மட்டுமே ஒர் ஆஸ்ரமம் இந்தியாவில் உள்ளது. பலருக்கும் இது தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. 1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. காலை


6 மணி - மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள். அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும். இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம். ஜாதி மத பேதமில்லை, பெரியோர் சிறியோர் குழந்தைகள் அனைவரும்


பங்கு பெறலாம். அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு மட்டுமே! அப்படி முன் பதிவு செய்தால், இந்த ஆஸ்ரமத்தில் தங்க அறை கிடைக்கும், உணவும் கிடைக்கும் இலவசமாக. ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதம ஏற்பாடு இது. தனியாக செல்லலாம், தம்பதியாக


செல்லலாம், நண்பர்களாகச் செல்லலாம். இந்த ஆஸ்ரமத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் தங்கலாம். 1931 முதல் தொடர்ந்து ராம நாம கீர்த்தனைகள் நடைபெற்று வருவதால், இந்த ஆஸ்ரமம் முழுவதும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில், லட்சக்கணக்கான மனிதர்களின் ஜபம் காற்றில் பரவியிருப்பதை உணர முடிகிறது. இங்கே


மூன்று நாட்கள் தங்கியிருப்பதன் மூலமாக நம் நீண்ட நாள் மன உளைச்சல் தானாகவே சரியாகிவிடும். சிலருக்கு நிலையான மன உறுதி கூட சீர்குலைந்து போயிருக்கும், அதுவும் சரியாகிவிடும். ஆழ்ந்த மன நிம்மதி பெற விரும்புபவர்கள் இங்கே ஒருமுறை வந்தால் போதும்.
சிலருக்கு ஒரே நாளில் மன அமைதியைப் பெற

More from All

You May Also Like

TradingView isn't just charts

It's much more powerful than you think

9 things TradingView can do, you'll wish you knew yesterday: 🧵

Collaborated with @niki_poojary

1/ Free Multi Timeframe Analysis

Step 1. Download Vivaldi Browser

Step 2. Login to trading view

Step 3. Open bank nifty chart in 4 separate windows

Step 4. Click on the first tab and shift + click by mouse on the last tab.

Step 5. Select "Tile all 4 tabs"


What happens is you get 4 charts joint on one screen.

Refer to the attached picture.

The best part about this is this is absolutely free to do.

Also, do note:

I do not have the paid version of trading view.


2/ Free Multiple Watchlists

Go through this informative thread where @sarosijghosh teaches you how to create multiple free watchlists in the free


3/ Free Segregation into different headers/sectors

You can create multiple sections sector-wise for free.

1. Long tap on any index/stock and click on "Add section above."
2. Secgregate the stocks/indices based on where they belong.

Kinda like how I did in the picture below.