#எம்பெருமானார்_தரிசனம் #இராமாயணம் #திருவடியின்_ஏற்றம்

*** முன்னுரை ***

ஸ்ரீ இராமானுச தரிசனம் என்ற ஸ்ரீ வைணவத்தில் ஸ்ரீ அனுமனைப் பற்றி ஆசாரியர்கள் கூறுவதை அனுபவிப்பதே இப்பதிவின் நோக்கம்.

ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தின்படி ஸ்ரீ அனுமனின் வாழ்க்கை நிகழ்வுகளை நான்காகப் பிரிக்கலாம்:

1. ஸ்ரீ இராமனைத் தரிசிக்கும் முன்

2. ஸ்ரீ இராமனைத் தரிசித்த பின் (அன்னை சீதையைத் தரிசித்துப் பேசும் முன்)

3. அன்னை சீதையைத் தரிசித்த பின்

4. ஸ்ரீ இராமனால் பேரன்புடன் அணைக்கப் பெற்ற பின்
*** பாகம் 1: ஸ்ரீ இராமனைத் தரிசிக்கும் முன் ***

1.1

வாயுதேவனின் முழு அருளைப் பெற்றுப் பிறந்ததால் தேகபலத்தில் ஒரு குறையும் இல்லை.
சிறு குழந்தையாக இருந்தபொழுது சூரியனைப் பழம் என்று எண்ணி வானில் தாவி ஆதவனை விழுங்க இருந்த நேரம், இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் தாடையில் அடிக்க, வாயுதேவனின் கோபத்தை ஆற்ற தேவர்கள் பல அறிய வரங்களை அருளினர்.

தேக பலத்துடன் வரபலமும் சேர்ந்தது!
மற்ற வானரர்கள் வாழ்வில் நடக்காத ஒரு நிகழ்ச்சி. வாயு புத்திரன் பீமனின் வாழ்வில் நடக்காத ஒரு நிகழ்ச்சி. இதிலிருந்தே ஸ்ரீ அனுமனின் ஜீவாத்மா ஒரு தனிப்பட்டச் சிறப்பை உடைய ஜீவாத்மா என்று உணரலாம்.
1.2

எதிர்காலத்தில் அதே சூரியன் மற்றும் இந்திரனிடமே கல்வி கற்றார்!

ஸ்ரீ மங்களகிரி மாகாத்மியம் என்ற நூல் சூரியன் ஆகாயத்தில் நில்லாமல் பயணிக்க, ஸ்ரீ அனுமன் கைகளைக் கூப்பி அவரைப் பார்த்த வண்ணம் பின் நோக்கி சென்றுகொண்டே 24 மணி நேரங்களில் அனைத்தையும் கற்றார் என்று பகர்கின்றது!
இந்திரனிடம் இலக்கணம் கற்றுப் பண்டிதரும் ஆனார்!

இதனால் குரு பக்தி, சுறுசுறுப்பு, புத்திக்கூர்மை, கல்வியில் கவனம், நினைவாற்றல், கசடறக் கற்றல் ஆகிய பண்புகள் ஸ்ரீ அனுமனிடம் குடியிருந்தன என்பது விளங்கும்.
1.3

ஸ்ரீ சுக்கிரீவனை வாலி துரத்தியபொழுது, மொத்த வானர சேனையும் பலம் மிக்க வாலி பக்கமே நின்றன.

நால்வர் மட்டுமே அரண்மனைச் சுகங்களைத் துறந்து, ஸ்ரீ சுக்கிரீவன் பக்கம் இருக்கும் அறத்தை எண்ணி, அவருடன் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தனர்.

அவர்களுள் ஸ்ரீ அனுமனும் ஒருவர்.
1.4

ஸ்ரீ சுக்கிரீவரும் ஸ்ரீ ஜாம்பவானும் ஸ்ரீ அனுமனின் புத்திக்கூர்மை, பலம், வேகம், துணிச்சல் ஆகியவற்றைத் தாராளமாகப் புகழ்கின்றனர்.

ஸ்ரீ சுக்கிரீவருக்கு வாலியிடமிருந்து தப்பிக்க ரிசியமுக மலைகளில் தங்க யோசனை அளித்தவர் ஸ்ரீ அனுமன்தான்.
ஸ்ரீ இராமபிரானிடம் கொடுத்த வாக்கை நினைவூட்டியரும் கோபத்துடன் மின்னும் ஸ்ரீ இலக்குவனைச் சாந்தப்படுத்தக் கைகளைக் கூப்பும்படி யோசனை அளித்ததும் ஸ்ரீ அனுமனே!
விளையாடும் பருவத்தில் முனிவர்களிடம் குறும்புகள் செய்ய ‘உனது பலம் ஒருவர் நினைவூட்டினாலே உனக்கு நினைவு வரும்’ என்று மென்மையாகச் சபித்தனர்.

அதனால் மேற்கண்ட நற்பண்புகள் முதலில் உலகமே கண்டு போற்றும் வண்ணம் வெளிச்சத்திற்கு வரவில்லை.

ஆனால் இறையருள் தேடி வந்தது!!!
*** பாகம் 2 - ஸ்ரீ இராமனைத் தரிசித்த பின் ***

அன்னை சீதையை அரக்கன் இராவணன் கவர்ந்து செல்லும் பொழுது அவள் தனது மேலாடையில் ஒரு சிறு பகுதியைக் கிழித்துத் தன்னுடைய அணிகலன்களை வீச, அதை ஸ்ரீ சுக்கிரீவன் ஆகியோர் பத்திரப்படுத்தி வைத்தனர்.
அப்பொழுது திருமகளாம் அன்னை சீதையின் அருட்பார்வை அவர்கள் மீது படர்ந்தது!

இதுவே ஸ்ரீ சுக்கிரீவனுக்குப் பிறகு ஸ்ரீ இராமபிரானின் அருளைப் பெற்றுத்தந்தது.

ஸ்ரீ அனுமனுக்கு மிகப் பெரிய ஒரு மாற்றம் வருவதற்கு அடிக்கல் நட்டது!!
2.1

ஸ்ரீ இராமனை முதலில் சந்தித்த ஸ்ரீ அனுமன், ‘அணிகலன்களால் அலங்கரிக்கப் படவேண்டிய இத்தோள்கள் ஏன் இப்படி ஏதுமின்றி இருக்கின்றன?’ என்று வினவுகின்றார்.
இதற்கு ஸ்ரீவைணவ ஆசாரியர்கள் கூறிய பொருள்: 🙏

அவரது திண்தோள் வடிவழகிலும் வலிமையிலும் மயங்கி ‘இதற்கு கண்ணெச்சில் படுமே! இவற்றை அணிகலன்களால் மறைக்கவேண்டுமே!’ என்பது ஸ்ரீ அனுமனின் எண்ணம் என்பதாம்!!!
இராவணனும் கும்பகரணனும் இதே தோள்களைக் கண்டனர். திருமகளின் அருட்பார்வையைப் பெறாத அவர்களுக்கு இந்த எண்ணம் வரவில்லை!!

இக்கட்டத்தில் ஸ்ரீ இராமபிரான் ஸ்ரீ அனுமனின் பேச்சுத்திறனை மனமாரப் பாராட்டுகின்றார்!
ஸ்ரீ அனுமனின் வேதம், நாதம், இலக்கணம் ஆகியவற்றைப் பற்றிய அறிவு, பேச்சின் இனிமை, மிதமான வேகம், குரலின் ஏற்ற இறக்கங்கள், உடல் அங்கங்களில் காணும் தெளிவு ஆகியவற்றைப் புகழ்ந்து

‘இவனைப் போல ஒரு மந்திரி இருப்பவன் வெற்றியை அடைவான்!’ என்றும் ஸ்ரீ இராமபிரானே மகுடம் சூட்டுகின்றார்!
2.2

அன்னை சீதையைத் தேடப் புறப்பட்டபொழுது ஸ்ரீ அங்கதன், ஸ்ரீ ஜாம்பவான் ஆகியோரையும் விடுத்து ஸ்ரீ அனுமனுக்கே ஸ்ரீ இராமபிரான் தமது கணையாழியை அளிக்கின்றார்!

ஸ்ரீ சுக்கிரீவனும் ஸ்ரீ அனுமனே இச்செயலைச் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையுடன் பேசுகின்றார்.
2.3

கடலைத்தாண்ட வானத்தில் தாவும் முன், வயது சென்ற வானரர்களையும் தமது தந்தையான வாயுதேவனையும் பணிவுடன் வணங்குகின்றார்.

பிறகு வானரர்களைப் பார்த்து ‘நான் இக்காரியத்தை வெற்றியுடன் முடித்தே திரும்புவேன்’ என்று சிம்மநாதம் செய்கின்றார்.
தற்கொலை எண்ணத்துடன் மனம் சோர்ந்து இருந்த வானரர்களுக்கு இது உயிரும் உற்சாகமும் மூட்டுவதாய் அமைந்தது.

இதனால் ஸ்ரீ ஜாம்பவானும் இப்பேருதவியைப் பாராட்டுகின்றார்.
பிறகு இதே ஸ்ரீ அனுமன் அன்னை சீதையிடம், ‘வானர சேனையில் அனைவரும் குறைந்த பட்சம் எனக்குச் சமமானவர் அல்லது என்னைக் காட்டிலும் சிறந்தவர். தாங்கள் கவலையை விடுங்கள் தாயே!’ என்று பணிவு தோற்றப் பேசுவதையும் பார்க்கின்றோம்.
இலங்கையை எரித்துத் திரும்பியபொழுதும், சக வானரர்களிடம் அவர்களது சிறப்பை மதிப்புடன் பேசி அவர்களை உற்சாகப படுத்துவதையும் பார்க்கின்றோம்.

இதிலேயே அவர் தற்புகழ்ச்சி பேசுபவர் அல்ல என்பது விளங்கும்.
2.4

மாகடலைத் தாண்டும் பொழுது எழுந்த மூன்று தடைகளை ஸ்ரீ அனுமன் தகர்த்த விதமே அலாதியானது! 😍

மைனாக மலையிடம் மனங்கவரும் அன்புப் பேச்சு, சுரசையிடம் வியத்தகு புத்திக்கூர்மை, சிம்மிகையிடம் பெரும் ஆற்றல் - படிப்போரின் உள்ளங்களைக் கொள்ளைகொள்கின்றார்!
அன்னை சீதையைத் தேட எது சரியான நேரம், எது சரியான உருவம் என்பதை அலசி ஆராயும் முறை நமக்கு ஒரு நல்ல படிப்பினை!

இலங்கைக்கு காவல் தெய்வத்தை அலட்சியமாக வெல்வது நமக்கு ஒரு உற்சாகமூட்டும் கட்டம்!
இராவணனின் மனைவிகளான அழகிய பெண்கள் தம்மை மறந்து உறங்கும் பொழுது கண்டார்.

ஆனால் அவரது பிரம்மசரிய விரதம் நெருப்பென மின்னும் வண்ணம் அவரது மனம் சற்றேனும் சலனம் அடையவில்லை.

அன்னையைத் தேடுவதொன்றே அவரது உயர்ந்த நோக்கம்.
2.5

பெருமுயற்சி செய்தும் அன்னை சீதையைக் காணவில்லை என்றதும், ‘திரும்பிச்சென்றுச் செய்தியைச் சொல்லி மற்றவரின் உயிர்களைப் பறிப்பதற்கு நாமே இறக்கலாம்’ என்று தியாக மனப்பான்மையுடன் எண்ணுகின்றார்.

பிறகு தம்மைத் தாமே அற்புதமாக ஊக்கப்படுத்திக்கொள்கின்றார்.

நமக்கு ஒரு நல்ல படிப்பினை!
அப்பொழுது அவருக்கு ஒரு தெய்வீக எண்ணம் உதிக்கின்றது.

‘நான் தேடுகின்றேன்’ என்ற எண்ணத்தை விட்டு, ஸ்ரீ இராமபிரானையும் ஸ்ரீ இலக்குவனையும் வணங்குகின்றார்.
அன்னை சீதையையும், ‘உமது தகப்பனார் ஜனகனுக்கு அவர் செய்த வேள்வியின் பொழுது உம்மை வெளிப்படுத்தியது போல, நீர் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துவார்!’ என்ற பொருளில்

‘தேவி ஜனகாத்மஜா’ என்ற திருநாமத்தால் வணங்குகின்றார்.

அடுத்த கணமே அசோகவனத்தைக் கண்டார்!!!
*** பாகம் 3 - அன்னை சீதையைத் தரிசித்த பின் ***

அசோகவனத்துள் நுழைந்த ஸ்ரீ அனுமன் கூர்ந்து கவனிக்கின்றார்.

சிம்சுபா மரத்தின் அடியில் ஒரு பெண்மணி அமர்ந்திருப்பதைப் பார்த்து, ஸ்ரீ இராமபிரான் தன்னிடம் தெரிவித்தது போலவே உள்ள அவளது தோற்றம் மட்டும் அல்லாது
இவர் அவளைக் கண்டபோது அவளது ஆடையின் வண்ணம், அவள் மேலிருந்து விட்டெறிந்த அணிகலன்கள் இவற்றையும் கொண்டு, அவளே சீதை என முடிவு செய்கின்றார்!!

அவரது மதிநுட்பம், கவனிக்கும் திறன், நினைவாற்றல் ஆகியவற்றைக் காண்கிறோம்.
3.1

முதலில், “ஸ்ரீ இராமபிரான் மாபெரும் வீரர். ஒரு பெண்பிள்ளையை இழந்து இவ்வளவு வாடுகின்றாரே!” என்று எண்ணியிருந்தவர், அன்னை சீதையைக் கண்டவுடன், “இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த பெண்மணியைப் பிரிந்து ஸ்ரீ இராமபிரான் இன்னும் உயிர் வாழ்கின்றார் என்றால் அது பெரிய சாதனை!
ஒப்பற்ற கற்புக்கரசியான இவளுக்காக மூன்று உலகங்களையும் தலைகீழாக மாற்றினாலும் தகும்!” என்கின்றார்!!

இந்த மனமாற்றமே ஸ்ரீ அனுமனின் மேன்மைக்கு முதல் படியாம்.

இதன் பிறகு அன்னை சீதையைப் பற்றி பேசத் தொடங்கும் போதெல்லாம் அவள் இருக்கும் திக்கு நோக்கி வணங்கிய பின் பேசுகின்றார்!!
அனுதினமும் இராவணனும் அரக்கியரும் அன்னையைப் பார்த்துக்கொண்டிருந்தனர் - ஒருவருக்காவது இந்த நற்பண்பு ஏற்பட்டதா?
3.2

முதலில் அன்னை சீதையிடம் தம்மை ‘இராமதூதன்’ என்று அறிமுகப் படுத்திக்கொண்டவர், அன்னை சீதையைச் சந்தித்துப் பேசிய பின்னர், அரக்கரிடம் தம்மை ‘இராமதாசன்’ என்று அறிமுகப் படுத்திக்கொள்கின்றார்!!

ஸ்ரீ அனுமன் ஸ்ரீ இராமபிரானின் அடியார்களில் ஒருவர் என்பதைப் பறைசாற்றும் தருணம் இது!
3.3

முதலில் ஸ்ரீ ஜாம்பவானின் தூண்டுதலாலேயே தமது ஆற்றல் நினைவுக்கு வர, மாகடலைத் தாண்டினார். ஆனால் மனம் குளிர்ந்த அன்னை சீதையின் முழு ஆசிகளையும் பெற்றதன் பின், இராவணன் சேனையில் மாபெரும் பலம் படைத்த அரக்கரிடம் எவரது தூண்டுதலுமின்றித் தாமே பொருதார்!
திருமகளாம் அன்னை சீதையின் அருட்பார்வையால் அவரது சிறு வயது சாபமும் நீங்கியது!!
3.4

முதன்முதலில் இராவணன் அசோகவனத்தில் அன்னை சீதையுடன் பேச வந்தபொழுது, அவனது ஒளியைத் தாங்கமுடியாமல் இலைகள் பின் ஒளிந்துகொண்டவர், அன்னை சீதையின் ஆசிகளைப் பெற்ற பின் எதிரிகளால் சூழப்பட்டபொழுதும், எவ்விதத் தயக்கமுமின்றி, இராவணன் முன்னே துணிவுடன் நின்று,
அவன் கேட்க விரும்பாத உண்மைகளை அமைதியாகவும் தெளிவாகவும் உரைத்தார்!

3.5

முதலில் அன்னை சீதையைத் தேடியபொழுது எந்த வேண்டுதலும் இல்லாமல் செய்து, இலங்கை முழுவதும் தேடி, அதன் பிறகு பிரார்த்தனை செய்தார். ஆனால் அன்னை சீதையின் அருட்பார்வைக்கு இலக்கானபின், அவரது தெய்வ நம்பிக்கை வலுத்தது.
அவரது வாலில் நெருப்பு வைத்தபொழுது, அது சுடவில்லை என்றதும், ‘இது அன்னை சீதையின் இன்னருள்! ஸ்ரீ இராமபிரானின் கருணை! அவரது தந்தையார் வாயுதேவன் மீது அக்னித தேவன் வைத்திருக்கும் அன்பு” என்று உணர்கின்றார்!.
3.6

அன்னை சீதையைத் தேடியபொழுது, இலங்கையின் செல்வத்தைக் கண்டு வியந்தவர், அவளது துக்கத்தை உணர்ந்த பின்னர், அவளது துயர் எனும் நெருப்பையே கொண்டு, அவரது தந்தையான வாயுவும் செய்யத்துணியாததைச் செய்தார். இலங்கையை எரித்தார்!
அவரை வீதிகளில் அரக்கர்கள் இழுத்துச் சென்றபொழுதே இலங்கையில் உள்ளவற்றை வேவுபார்த்து, மனதில் தேக்கிவைத்து, ஸ்ரீ இராமபிரானிடமும் தெரிவித்தார்.
3.7

இலங்கையை நோக்கி பயணத்தைத் தொடங்கியபொழுது, பற்பல தெய்வங்களை வழிபட்டவர், அன்னை சீதையின் அருள் பெற்றபின், கடலைத் தாண்டும் முன் அன்னை சீதையையும் ஸ்ரீ இராமபிரானையுமே வணங்கிப் புறப்படுகின்றார்! அவர்கள் இருவருமே அவருக்குக் கண்கண்ட தெய்வங்கள் ஆகிவிட்டனர்!!
*** பாகம் 4 - ஸ்ரீ இராமனால் பேரன்புடன் அணைக்கப் பெற்ற பின் ***

திருமகளாம் அன்னை சீதையின் பேரருட்பார்வையும் கருணையும் பெற்ற பின்னர், ஸ்ரீ அனுமனுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு ஸ்ரீ இராமபிரானால் ‘உத்தம சேவகன்’ என்று கொண்டாடப்பட்டு, அவரது திருமேனியால் பேரன்புடன் அணைக்கப்பட்டதே!
4.1

ஸ்ரீ அனுமன் மட்டுமே ஸ்ரீ விபீடணரின் குற்றமற்ற பேச்சு, முக பாவனை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, ‘அவரை நம்மில் ஒருவராக ஏற்பது சரி’ என்று தம் கருத்தை ஸ்ரீ இராமபிரான் கேட்டதால் தெரிவிக்கின்றார். இது சரண் அடைந்தோரைத் தவறாமல் காக்கும் ஸ்ரீ இராமபிரானுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது!
4.2

போர்க்களத்தில் ஸ்ரீ ஜாம்பவான் ஸ்ரீ அநுமனை, ‘நீ ஒருவனே நம் சேனையைக் காக்கக்கூடியவன்’ என்று புகழ்ந்து, சஞ்சீவினி மூலிகையை எடுத்து வரச்சொல்ல, புகழ்ச்சியிலும் மயங்காமல் பணிவே உருவான ஸ்ரீ அனுமன், ஸ்ரீ ஜாம்பவானின் திருவடிகளைத் தொட்டு வணங்கி, இமயத்தை நோக்கிப் பயணம் செய்கின்றார்.
அங்கேயும் அம்மூலிகைகள் இவர் வந்திருப்பதை அறிந்து தம்மை மறைத்துக்கொள்ள, ஸ்ரீ அனுமன் ‘ஸ்ரீ இராமபிரானுக்கு உதவ மறுப்பாரும் உளரே!’ என்று வெறுத்து, அம்மூலிகை மலையையே பெயர்த்து வருகின்றார்!!!

அப்பொழுதும் ஸ்ரீ இராமபிரானின் நன்மையிலேயே நோக்கம்!
4.3

ஸ்ரீ இலக்குவன் போரில் மயங்கி விழுந்தபொழுது, இராவணன் அவரைத் தூக்கிச் செல்ல முயல, அவ்வரக்கனால் அவரை எள்ளளவும் நகர்த்த முடியாமல் தனது இல்லம் திரும்பினான்.

ஸ்ரீ அனுமனோ ஸ்ரீ இலக்குவனை ஒரு பறவையின் சிறகை தூக்குவது போலத் தூக்கிவிட்டார். ஸ்ரீ அனுமன் மெய்யடியார் அன்றோ?
4.4

ஸ்ரீ இராமபிரானின் வெற்றிச் செய்தியை அன்னை சீதையிடம் கொண்டு சென்றதும் ஸ்ரீ அனுமனே! அதைக் கேட்டு உவகைவெள்ளத்தில் மூழ்கிய அன்னை சீதை ஸ்ரீ அனுமனைப் புகழும் வார்த்தைகள் ஒவ்வொரு ஸ்ரீ அனுமன் அடியாருக்கும் தேன்வெள்ளமென இனிக்கும்!
ஸ்ரீ அனுமனோ,

‘தாயே! தங்களது இந்த அன்பு வார்த்தைகளே தாங்கள் அடியேனுக்கு அளித்த பரிசாம். தாங்கள் அடியேனுக்கு ஏதேனும் தரவேண்டும் என்று எண்ணினால், தங்களைத் துன்புறுத்திய இவ்வரக்கிகளை உதைக்க அனுமதி அளிப்பீர்!” என்று ஒரு நல்ல தனயனுக்கே உரிய அன்புடனும் கோபத்துடனும் பேசுகின்றார்.
அப்பொழுதும் தனக்கென எதுவுமே வேண்டவில்லை.

“அம்மையும் அப்பனும் நலமாக இருத்தல் வேண்டும்” என்பதே அவரது குறிக்கோள்.
4.5

ஸ்ரீ அனுமனால்

தற்கொலை செய்யவிருந்த அன்னை சீதையும்,
அன்னை சீதையின் பிரிவால் பெருந்துயரில் வாடிய ஸ்ரீ இராம்பிரானும்,
போர்க்களத்தில் மயங்கிய ஸ்ரீ இலக்குவனும்,
வானரர்களும்

உயிர் பிழைத்தனர்.

அவர்கள் மட்டுமா?

ஸ்ரீ பரதாழ்வானின் உயிரையும் ஸ்ரீ அனுமனே காத்தார்!!!
ஸ்ரீ இராமபிரான் 14 ஆண்டுகள் முடிந்து இன்னும் வரவில்லை என்பதால் தீயில் குதிக்க ஸ்ரீ பரதாழ்வான் தயாரானபொழுது, ஸ்ரீ இராமபிரானால் அனுப்பப்பட்ட ஸ்ரீ அனுமனே அதைத் தடுத்து ஸ்ரீ பரதாழ்வானுக்கு நற்செய்தியைக் கொடுத்தார்!!
அன்னை சீதையை முதலில் சந்திக்கும் முன் ஸ்ரீ இராமபிரான் பெருமைகளை மறைந்திருந்து அவளைக் கேட்கச் செய்துவிட்டுப் பின் அவளைச் சந்தித்தார்!

அன்னை சீதையைக் கண்டுவிட்டதை வானத்திலிருந்தே தமது சிம்மநாதத்தால் மனம் நொந்திருந்த வானரர்களுக்குத் தெரிவித்து அவர்களை புத்துணர்வு பெறச் செய்தார்!
ஸ்ரீ இராமபிரானிடம் ‘கண்டேன் சீதையை’ என்று வினைச்சொல்லை முதலில் சொல்லி அவரை உயிர்ப்பித்தார்!

ஆனால் ‘ஸ்ரீ இராமபிரான் அயோத்தி திரும்பிவிட்டார்’ என்ற செய்தியை ஸ்ரீ பரதாழ்வானுக்கு மெதுமெதுவே எடுத்துச் சொன்னாராம்!
ஏனெனில் அவ்வளவு மகிழ்ச்சி தரும் செய்தியைப் பட்டென்று உடைத்தால் ஏங்கியிருக்கும் ஸ்ரீ பரதாழ்வான் உயிரையே விட்டிருப்பாராம் - அதற்கேற்ப ஸ்ரீ அனுமன் மெதுமெதுவே தெரிவித்ததற்கே ஸ்ரீ பரதாழ்வான் மூர்ச்சை ஆகிவிடுகின்றார்!!

என்னே ஸ்ரீ அனுமனின் மதிநுட்பம்!!
4.6

ஸ்ரீ இராமபிரானின் பட்டாபிஷேகம் பொழுது அன்னை சீதையும் ஸ்ரீ இராமபிரானும் ஸ்ரீ அனுமனுக்கென்றே ஒரு முத்து ஆரத்தை அணிவிக்கின்றனர். அவரிடமே புத்திக்கூர்மையும் செயல்திறனும் நற்புகழும் பணிவும் குடிகொண்டிருப்பதாக அவர்கள் ஸ்ரீ அனுமனைப் பாராட்டுகின்றனர்!

இதைவிட சிறப்பும் உண்டோ?
*** பாகம் 5 - ஏன் ஸ்ரீ அனுமனுக்கு மட்டும் இவ்வருள் கிட்டியது? ***

மற்ற வானரர்களும் ஸ்ரீ இராமபிரானுக்குத் தொண்டுகள் செய்தனர். ஏன் ஸ்ரீ அனுமனுக்கு மட்டும் இவ்வளவு கௌரவம்?

இதற்கு ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் மிக மிக நுட்பமான ஒரு உண்மையைத் தெரிவிக்கின்றனர்!!!
கிஷ்கிந்தா காண்டத்தில் சர்க்கம் எட்டில் ஒரு கட்டத்தில்

ஸ்ரீ சுக்கிரீவர் ஸ்ரீ இராமபிரான் அமர ஒரு மரக்கிளையை முறித்துப் போடுகின்றார். தாமும் அதில் அமர்கின்றார். ஆனால் ஸ்ரீ இலக்குவனுக்கு அவர் எந்த ஆசனமும் அளிக்கவில்லை.
ஆனால் ஸ்ரீ அனுமனோ ஸ்ரீ இராமபிரான் அமர்ந்த அதே மரக்கிளையில் ஸ்ரீ இலக்குவனும் சரிசமமாக அமரமாட்டார் என அறிந்து, அவர் ஸ்ரீ இலக்குவனுக்குத் தனியே ஒரு மரக்கிளையை முறித்துப் போடுகின்றார்!!
ஸ்ரீ இலக்குவன் அன்னை சீதைக்கும் ஸ்ரீ இராமபிரானுக்கும் தொண்டு புரிவதையே தமது உயிராகக் கொண்டவர்.

அப்படிப்பட்ட அடியவரைத் தக்கபடி மதித்ததே ஸ்ரீ அனுமனை ஸ்ரீ இராமபிரானின் திருவுள்ளத்தில் உயர்த்தியது.
இன்று ஸ்ரீ இராமபிரானுக்கும் இல்லாத புகழ் ஸ்ரீ அனுமனுக்கு இருப்பதற்கு ஸ்ரீ இராமபிரானின் இந்த மகிழ்ச்சியே காரணம்!!

திருமாலடியாரைப் பூசிப்பவர்கள் செங்கண் திருமுகத்துச் செல்வது திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்!
*** முடிவுரை ***

ஸ்ரீ இராமபிரானைத் தோள்களில் ஸ்ரீ கருடாழ்வாரைப் போலத் தூக்கியதால் ஸ்ரீ வைணவர்கள் ஸ்ரீ அனுமனைத் “திருவடி” என்றே போற்றுவர்.
இன்றளவும் ஸ்ரீ அனுமன் ஸ்ரீ இராமபிரானின் மகிமையிலேயே மயங்கி, ஸ்ரீ வைகுந்தமும் வேண்டாமென்று,

இப்பூவுலகில் எங்கெல்லாம் ஸ்ரீமத் இராமாயணம் படிக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் கூப்பிய கரங்களுடனும் ஆனந்தக் கண்ணீர் பொழியும் திருக்கண்ங்களுடனும் எழுந்தருளுகின்றார்!
ஸ்ரீ அனுமனுக்குப் பல்லாண்டு! பல்லாண்டு! பல்லாண்டு!

🙏🌷🌷🌷

More from Ms K G Dhouhithri

Actually, in general, the term Azhwar is used to refer to even those Adiyaars who permanently reside in Sri Vaikuntam with Emperumaan. They are called Nithyasuris. Chakrathazhwar, Garudazhwar, Thiruvananthazhwan, Senapathi Azhwan and such names are quite common.

1/n


In fact, even for some Acharyas the term Azhwan has been suffixed to Their Thirunamams as a mark of Their strikingly deep Bhakthi. Eg: Sri Koorathazhwan, Sri Milagazhwan.

2/n

That being said, the term Azhwar is primarily used to refer to those specific Bhakthas who were gifted with purest gnanam (mayarvara mathinalam) by Sriman Narayana for the unique cause of revealing the 4000 Divya Prabandhas (also celebrated as Thamizh or Dravida Vedas).

3/n

Thereby, those 12 noble Devotees alone are included in the Azhwar list.

In case of Swami Ramanujacharya, the purpose of His Avathara was not to reveal the 4000 Divya Prabandhas but to enhance the spread of those 4000 Divya Prabandhas and Their glories.

4/n

Hence, Swami Ramanuja is in the Acharya goshti. However, two major points to note are:

1. Swami Ramanuja is none but Swami Nammazhwar's Divine Feet and His Avathara is an extension of Swami Nammazhwar's Avathara.

5/n
#எம்பெருமானார்_தரிசனம்
#சொல்லுவோம்_அவன்_நாமங்களே


திருமாமகள் கேள்வனுக்கும் திருமாமகளுக்கும் பன்னிரு திருநாமங்கள் உள்ளன என்பது நம்மில் பலர் அறிந்திருக்கக்கூடும்.

பதின்மூன்றாவதாகவும் ஒரு திருநாமம் இருவருக்குமே (வாசுதேவ:, சர்வாபீஷ்டபலப்ரதா) உண்டு என்று பெரியோர் பணிப்பர்.

“இது போலவே ஸ்ரீ வைணவ குருமார்களின் தலைவரான எம் ஐயன் இராமாநுசருக்கும் பதின்மூன்று அழகிய சிறப்புத் திருநாமங்கள் உள்ளனவோ?” என்று வியக்கும்படி அவருக்குப் பெரியோர்கள் பட்டங்கள் அளித்துள்ளனர்!

அவற்றைத் தொகுத்து வழங்குவதே இந்த இழையின் நோக்கம்.

* ஞானத்தின் அதிதெய்வமான சரசுவதி தேவி அளித்தது *

1

இராமாநுசர் காஷ்மீரம் சென்றபொழுது சரசுவதி தேவி அவர் முன் தோன்றி, "நீர் 'கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ' என்ற வேத வாக்கியத்தின் பொருள் உரைப்பீர்!" என்ன,

இராமாநுசரும் "இதற்குப் 'பரம்பொருள் ஆதவனால் அன்று அலர்த்தப்பட்டத் தாமரையைப் போன்றத் திருக்கண்கள் உடையவன்' என்று பொருள்" என உரைத்தார்.

நாமங்கையும் மிக உகந்து, வேதங்களின் பொருளை விளக்க இராமாநுசர் எழுதிய உரையைத் தமது சிரத்தில் தரித்து, "இதுவே ஸ்ரீபாஷ்யம்! நீரே ஸ்ரீபாஷ்யகாரர்!"
I understand the disappointment when our sects fight in full public view and the embarrassment thereof.

However, my concern is different, TBH.

Am even okay with all our infighting.

My problem is when we don't set those differences aside & join hands to face a common foe.

1/n


This maturity is not new to us - it has already been explained in the Mahabharatha!!

Yudhishtira tells his brothers to fight the Gandharvas & defend their cousins (Kaurava). This was *after* the game of dice, mark you.

2/n

When Bheema protested, Yudhishtira explains: "Between us & the Kauravas, we are 5, they are a hundred. In front of outsiders, however, we're a 105."

Sanathana Dharma has been there for time immemorial. It's natural that we have sects, unresolved disagreements, etc..

3/n

Abrahamics have sects for just a 2000-year existence. And they too bicker among themselves!!!

So, the real issue, IMHO, is forgetting to gather under our common identity.

4/n

If we try to silence voices or concerns of our internal sects for the sake of common unity, some people of the section that feels unheard may even shake hands with the very foe we're trying to vanquish. This is one of my greatest concerns.

5/n
#எம்பெருமானார்_தரிசனம்

#குலசேகராழ்வார்

#பெருமாள்_திருமொழி

#ஸ்ரீவைணவ_ஆசாரியர்கள் அருளிய

#ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களின் பொருளமுதத்தில்

தீஞ்சுவை அமுதத் துளிகள்!

🍯🍯🍯🍯🍯🍯🍯🍯🍯🍯🍯🍯

"எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே" என்றும் "படியாய்க் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே" என்றும் நாடு நகரமும் நன்கறிய முழங்கிய எங்கள் குலசேகரனின் திருநட்சத்திரம் இன்று. நல்லவர்கள் கொண்டாடும் நாள்!


ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் உரைகள் ஆழ்வார்களின் ஒவ்வொரு சொல்லிலும் பெரிதும் ஈடுபட்டு விளைந்தவை.

தெய்வீகச் சம்பவங்களில் கூட உரைகள் தோன்றியுள்ளன என்பதற்குச் சில சான்றுகள்!

வாரீர்! பெருமாள் திருமொழியில் உள்ள சில வரிகளுக்கு நம் ஆசாரியர்கள் அருளிய பொருட்சுவையைச் சுவைப்போம்!

6ம் திருமொழி 8ம் பாசுரம்

ஸ்ரீ குலசேகராழ்வார் ஸ்ரீ இராமபிரான் மீது பற்று உடையவர் என்பது பலரும் அறிந்ததே ஆனால் அவர் ஸ்ரீ கண்ணபிரானையும் பாடியுள்ளார்.

இப்பதிகம் ஸ்ரீ கண்ணபிரானுடன் பல கோபிகைகள் ஊடல் கோபத்துடன் பேசுவதாக நாயகி மனோபாவத்தில் அமைந்துள்ளது!

இப்பாசுரத்தின் பொருள்:

'என்னை ஒரு இடத்திற்கு வரச்சொல்லி, முல்லைப்பந்தலில் பதுங்கியிருந்த இன்னொரு கோபிகையுடன் கூடியிருக்கப் போகும்பொழுது எனைக் கண்டு, உன் பீதகவாடையைப் பிடித்துக்கொண்டு இல்லாத பொய் அச்சத்துடன் ஓடினாய். என்றாவது என்னைக் காண வருவாய்.

More from All

You May Also Like