ஷண்முகநாதன் என்பவர் (அவர் யாரென தெரியவில்லை) எழுதியதாக என் நண்பன் மஸ்கட்டிலிருந்து 'வாட்ஸ்ஆப்'பில் அனுப்பிய செய்தி.

அதில் 'திராவிட மாடல்' என்ற 'டப்பா' வண்டியையும் அதன் ஓட்டுனரையும் ரோடு ரோலரால் முன்னும் பின்னும் ஏற்றி, இறக்கி நசுக்கி எடுத்து விட்டார்.

படிச்சி enoy பண்ணுங்க!!!

'அவர் ஆபத்தானவர்'என்று அவர்கள் கொக்கரித்த போது கூட அவ்வளவு நம்பவில்லை. இப்பொழுது நம்புகிறேன், அவர் ஆபத்தானவர்.

பைத்தியத்தின் கையில் கிடைத்த கூர்மையான கத்தி ஆபத்தானது. அந்த வகையில் அவர் ஆபத்தானவர். பைத்தியத்தின் கையில் கிடைத்த துப்பாக்கி ஆபத்தானது, அந்த வகையில் அவர் ஆபத்தானவர்
இதையேதான் வள்ளுவன் "பேதைகளின், முட்டாள்களின் கையில் ஒரு பொருள் கிடைத்தால், கள்ளுண்டவர்களைப்போல நடந்து கொள்வார்கள்" என்றான்.

"மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்"

ஒரு பேதையின் கையில் ஒரு அரசாங்கம் கிடைத்திருக்கிறது. ஆபத்து!
யாரோ எழுதிக்கொடுத்ததை, வார்த்தைக்கு வார்த்தை, துண்டு சீட்டைப் பார்த்து படிக்கும் பொம்மை முதல்வர் தமிழகத்துக்கும் தமிழினத்துக்கும் ஆபத்தானவர்.

31000 கோடி நலத்திட்டங்கள் அறிவிக்க வரும் பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு he is playing to the gallery. ஒன்றியம் ஒன்றியம் என்று சொல்லி
வெறுப்பேற்றுகிறாராம். என்ன பைத்தியக்காரத்தனம்! ஒரு maturity வேண்டாமா! கைதட்டல் அவ்வளவு முக்கியமா? நன்றி என்ற உணர்வு எங்காவது உடம்பில் மனதில் கொஞ்சமாவது இருக்கிறதா இந்த திராவிட மாடல் பைத்தியங்களுக்கு?

இடையில் தன் தந்தையின் வார்த்தைகளை சொல்லி மிரட்டல் வேறு.
பாரதப் பிரதமரிடம் இருந்து மாறுபட்டால் தான் திராவிட மாடல் செழிக்குமா? மாறுபட்டால் வெல்லலாம் என நினைப்பவன் வாழ்க்கை நாசமாகும் என்று இந்த திராவிட மாடல் பைத்தியங்களுக்கு வள்ளுவர் சொன்னது தெரியாது. நாம் சொல்லி வைப்போம்.

"இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து"
இந்த மூடர்களின் எண்ணமும் கேடு கெட்ட அரசியலும், வள்ளுவன் சொன்னது போல, நாசமாகட்டும்.

எங்கே போனாலும் பின்னாடி கையை கட்டிக்கொண்டு, வேடிக்கை பார்க்க வந்த பெரிசு போல, கொஞ்சமும் சபை மரியாதை தெரியாத ஒரு நபரை முதலமைச்சராக பெற்றதற்கு ஒவ்வொரு தமிழனும் வெட்கப்பட வேண்டும்.
தெருக்கூட்டம் கூட இன்னும் கொஞ்சம் தரமோடு இருக்கும், இப்படி அறியாமையோடும் அராஜகத்தோடும் ஒரு அரசு நிகழ்ச்சி நடத்தியதற்கு அவர் வெட்கப்படவேண்டும்.

இவர்கள் அரசியல் வாழ்க்கை கெட்டழியட்டும்.

அறிவில்லாமல் மேடையேறி பிதற்றும் ஒரு பித்துப்பிடித்த பைத்தியம் ஆபத்தானது.
படிக்காதவனின் மதிப்பு படித்தவர் முன் பேசும் போது கெட்டுவிடும்.

"கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்."

இந்த குறளுக்கு, இன்று மேடையேறி உளறியவரின் தந்தை எழுதிய, உரை "கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம்,
கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்"

கலைந்து போயிருக்கிறது இன்று.

அறியாமை பைத்தியம் ஆபத்தானது. ஆம் அவர் ஆபத்தானவர்.

S Shanmuga Nathan ji

💥💥💥

எப்படி?

"ச்சும்மா...கிழி" இல்ல...!!!

More from All

You May Also Like