திருநாங்கூர் 11 கருட சேவை விளக்கம்:

-------------------------------------------------
11 திவ்யதேச ௭ம்பெ௫மான்களையும் ஒரே இடத்திலே கருட சேவையில் ஆழ்வா௫டன் ஸேவிக்கலாம்.

பதினொரு பெருமாள்களையும் ஒருங்கே தரிசிக்கும் பெரும் பாக்கியம்!

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும்ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமமே.
திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்
தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
அருள் நடந்து இவ் வேழுலகத் தவர்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம்
என்று ஆழ்வார்களால் போற்றப்படும் திருநாங்கூர் திவ்ய தேசத்தில்
பெருமாளை பெரிய திருவடியான கருட வாகனத்தில் சேவித்தால்
மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்..
நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் 108 வைணவ தலங்களில்
11 கோயில்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் ஆண்டுதோறும் கருட சேவை உற்சவம் விமரிசையாக நடைபெறும்.
தை அமாவாசைக்கு மறுநாள்- கருடசேவையின்போது, 11 பெருமாள்களும் கருடவாகனத்தில் எழுந்தருள... திருமங்கையாழ்வார் அன்ன வாகனத்தில் எழுந்தருளி, மாலை- மரியாதையுடன் வலம் வந்து மங்களாசாசனம் செய்வது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்
ஆண்டு தோறும் திருநாங்கூர் மணிமாடக்கோயில் நாராயணப் பெருமாள் சந்நிதியில் தை அமாவாசைக்கு மறுநாள் 11 பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கும் உற்ஸவம் நடைபெறும்.

அனைத்து பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்படும்..!
தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார், மணவாளமாமுனிகள் சகிதம் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்து சிறப்பு தீபாராதனை காண்பித்து கருட சேவை நடைபெறும்..!
பெருமாள்கள் வீதியுலா காட்சியுடன் 11 கருட சேவையை தரிசித்தால் புண்ணியங்களின் பலன்கள் ஏராளம் கிடைக்கும்,

திருநாங்கூர் மணிமாடக் கோயில்
சீர்காழிக்கு அருகே விளங்கும் திருத்தலம், திருநாங்கூர்.

இந்த ஊரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன.
இந்த ஊரைச் சுற்றிலும் சுமார் நான்கு கிலோமீட்டர் சுற்றளவில் மேலும் 5 திவ்ய தேசங்கள்.
ஆக மொத்தம், பதினொன்று!

பல மலர்கள் சேர்ந்த ஒரு மலர்க் கொத்தாக இந்த திவ்ய தேசங்கள் திகழ்கின்றன.

ஒரே பகுதியில் உள்ள திவ்யதேசங்கள்தானென்றாலும், ஒன்றுக்கொன்று நெடிய தொலைவில்தான் அமைந்திருக்கின்றன.
இதுதான் அந்த திவ்ய தேசங்களின் பட்டியல்:
1. திருக்காவளம்பாடி,
2. திரு அரிமேய விண்ணகரம்,
3. திருவண்புருடோத்தமம்,
4. திருச்செம்பொன்செய் கோயில்,
5. திருமணிமாடக் கோயில்,
6. திருவைகுந்த விண்ணகரம்,
7. திருத்தேவனார்த் தொகை,
8. திருத்தெற்றியம்பலம்,
9. திருமணிக்கூடம்,
10. திருவெள்ளக்குளம்,
11. திருப்பார்த்தன்பள்ளி.

இந்தப் பட்டியலில் முதலில் நாம் தரிசிக்கப் போவது திருமணிமாடக் கோயில் திருத்தலம்.
திவ்ய தேச விழாக்களிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, வேறெந்த திவ்ய தேசத்திலும் காணக் கிடைக்காததுமான பதினொரு பெருமாள்கள் தரிசனம் ஒவ்வொரு வருடமும் இங்கே நிகழ்கிறது.

ஆமாம், அத்தனைப் பெருமாள்களும் தத்தமது கருட வாகனமேறி இங்கு எழுந்தருளி, பக்தர்களைப் பரவசப்படுத்துகிறார்கள்.
திவ்ய தேசத்திற்கென்றே பிரத்யேகமாக ஒரு பாசுரம் கொண்டிருக்கிறது.

அதாவது, இந்த தலத்திலுள்ள பெருமாள், தன் திருவடி நிழலைத் தன் பக்தர்களுக்கு மட்டுமே அருள்வான்;
அவன்மீது பக்தி செலுத்தாத பிறர் இந்த பாக்கியத்தைப் பெற இயலாது, என்ற பொருளில்,
‘‘இவ்வுத்தமன் தன் பூவடியை அன்பினருக்கு அன்றிப் புறத்து ஒருவர் மேவ அருளாத மேலோன், திருநாங்கூர்க்காவல் புரிந்து அருளும் கார்வண்ணன்”
என்று அமைகிறது அந்தப் பாடல்.
இந்தக் கோயிலை "நாராயணப் பெருமாள் கோயில்" என்றே பொதுவாக அழைக்கிறார்கள்.

ஏனென்றால், ஸ்ரீமன் நாராயணன், தன் திருப்பெயரையே அஷ்டாக்ஷர மந்திரமாக்கி உபதேசம் செய்தார்.

யாருக்கு?
தனக்கே!
அதாவது தானே ஆசானாகி, தன் நாமத்தையே மந்திரமாக்கி, தன்னையே சீடனாக்கி, தனக்கே உபதேசம் செய்துகொண்ட அற்புதம்!

அதாவது உலகின் எல்லா ஜீவராசிகளிலும் தானே நிறைந்திருக்கும் உண்மையை விளக்கும் தத்துவம்.
ஆணவம் கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கொய்ததால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட, அது நீங்க, சிவபெருமான், உமையுடன், கோகர்ணம் என்ற தலத்தில், திருமாலைக் குறித்து தவம் இயற்றினார்.
அவர் முன் தோன்றிய திருமால், அவரை பலாச வனத்தில் உள்ள நாங்கூர் திருத்தலம் சென்று, பதினொரு ருத்ர தோற்றங்கள் கொண்டு அசுவமேத யாகத்தைச் செய்யுமாறும், அது நிறைவுறும் சமயத்தில், தான் வந்து அவரது தோஷத்தை நீக்குவதாகவும் வாக்களித்தார்.
அதன்படி, சிவபெருமானும் பதினொரு ருத்ர ரூபங்கள் கொண்டு யாகத்தை இயற்றினார்.

அவருக்கு ஸ்ரீமன் நாராயணன், பிரணவ விமானத்தில் காட்சியளித்து, சிவனுடைய தோஷத்தைப் போக்கினார் என்கிறது தல புராணம்.
தான் கொண்ட பதினொரு ருத்ர உருவங்களுக்கு தனித்தனியே, அதாவது பதினொரு வடிவில் அருள் புரிந்ததால், திருமால், இந்த திவ்ய தேசத்தில் பதினொரு அர்ச்சா மூர்த்தங்களாக விளங்க வேண்டும் என்று சிவபெருமான் கேட்டுக் கொண்டார்.
பின்னாளில், பக்தர்கள் பதினொரு ருத்ரனுக்குக் காட்சி தந்த பதினொரு நாராயணன்களை தரிசித்து அனைத்துப் பேறுகளையும் பெற வேண்டும் என்பது சிவபெருமானின் விருப்பம்.

அதன்படி பெருமாள் கொண்ட கோலங்கள்தான் இப்போது பதினொரு திவ்ய தேசங்களாக திருநாங்கூரில் அமைந்துள்ளன.
அவற்றில் பிரதானமானது திருமணி மாடக் கோயில்.

இங்கே திருக்கோஷ்டியூர் நம்பிகளுக்குத் தனி சந்நதி அமைந்திருக்கிறது.

ஸ்ரீராமானுஜருக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்தவராயிற்றே!
தானே தன் நாமத்தை மந்திரமாகத் தனக்கே உபதேசித்துக் கொண்ட திருமாலின் தலத்திற்கு வருகை தராது இருப்பாரா என்ன!

வேறெந்த திவ்ய தேசத்துக்கும் இல்லாத ஒரு பெருமை இந்த திருமணிமாடக் கோயிலுக்கு உண்டு.

.
தை மாத அமாவாசைக்கு அடுத்த நாளில், திருநாங்கூரின் பிற பத்து திவ்ய தேசப் பெருமாள்களும் தத்தமது கருட வாகனங்களில் வந்து இங்கே கூடுகிறார்கள்
அதியற்புதமான விழா அது.

அஷ்டாக்ஷரமான நாராயண மந்திரத்தை உபதேசித்த நாராயணன் கம்பீரமாகக் கோலோச்சும் இந்தத் தலத்திற்கு, திருநாங்கூரிலுள்ள பிற பத்து பெருமாள்களும் வருகை தரும் வைபவம்தான் அந்த 11 கருட சேவை.

திருநகரி என்ற திருநாங்கூர் பகுதியிலுள்ள ஊரில் அவதரித்தவர் திருமங்கையாழ்வார்.
திருமால் மேல் தீவிரக் காதல் கொண்டு, வைணவம் தழைக்க அரிய பல சேவைகளைப் புரிந்தவர் இவர்.

ஸ்ரீரங்கத்து மதில் சுவர்களை நிர்மாணித்து சேவையை மேற்கொண்ட இவர், பல திவ்ய தேசங்களுக்கு விஜயம் செய்து அந்தப் பெருமாள்கள் மீது பாசுரங்கள் பாடி, மங்களாசாசனம் செய்து அருந்தொண்டாற்றியிருக்கிறார்.
பிற தலங்களில் உள்ள பெருமாள்களையே மனம் நெகிழ தரிசித்தவர் என்றால், சொந்த ஊரிலும் அதைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும் கோயில் கொண்டிருக்கும் பெருமாள்களைத்தான் எப்படி நயந்து, நயந்து பாடி மகிழ்ந்திருப்பார்...!
இந்த அவருடைய நெகிழ்ச்சியை, மேலே குறிப்பிட்ட கருட சேவை வைபவத்தின் போது பார்த்து இன்புறலாம்.

ஆமாம், இந்த நிகழ்ச்சிக்காக, திருமங்கையாழ்வார், விக்ரக ரூபனாக திருநகரியிலிருந்து புறப்பட்டு மணிமாடக்கோயிலுக்கு வந்து சேருவார்.
பதினொரு பெருமாள்களையும் ஒரு சேர தரிசித்து அப்படியே மனம் குளிர்வார்.
தான் ஒவ்வொரு திவ்ய தேசமாகப் போய் அந்தந்தப் பெருமள்களை சேவித்து அவர்களை மங்களாசாசனம் செய்வித்த சம்பவங்கள் இப்போதும் கூடியிருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் உணர்த்தும் வகையில் அவர் மீண்டும் பாடுவார்.

இந்தச் சம்பவம் எப்படி நடக்கும்?
மணிமாடக் கோயிலில் இந்த பதினொரு பெருமாள்களும் குறிப்பிட்ட நாளன்று, மதியம் 1 மணி முதல் 6 மணிக்குள்ளாக, ஒவ்வொருவராக கருட வாகனத்தில் வந்து சேருவார்கள்.

அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமஞ்சனம், அலங்காரம் நடைபெறும்.

பிறகு அவர்கள் ஒருவர்பின் ஒருவராக ஊர்வலம் புறப்படுவார்கள்.
ஆழ்வார் முதலில் ஒரு பெருமாளைப் பாடியபடியே வலம் வருவார்;

வலம் வந்து நேருக்கு நேர் நின்று சேவிப்பார்.
பிறகு கற்பூர ஆரத்தி காட்டப்படும்.

பெருமாள், ஆழ்வார் செய்த மங்களாசாசனத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு அருள் புரிவார்.
ஆழ்வாருக்கு உரிய மரியாதையையும் செய்வார்.

அந்த மரியாதையை ஏற்றுக்கொள்ளும் ஆழ்வார், அவரை மீண்டும் வலம் வந்து வணங்கி, அடுத்து வரும் பெருமாளுக்காகக் காத்திருப்பார்.
இப்படி தனித்தனியே கருட வாகனத்தில் வரும் பதினொரு பெருமாள்களையும் பாடி, மரியாதை பெற்று, வலம் வந்து மனம் கனிவார் ஆழ்வார்.

இதைப் பார்த்துகொண்டிருக்கும் பக்தர்களுக்குத் தாமும் ஆழ்வார் காலத்துக்கே போய்விட்ட சந்தோஷமும், பெருமிதமும் ஏற்படும்.
மறுநாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம், அந்தப் பெருமாள்கள் மீண்டும் தத்தமது கருட வாகனத்தில் தத்தமது திவ்ய தேசங்களுக்குப் புறப்பட்டுச் செல்வர்.

இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு இன்னொரு பாக்கியமும் கிட்டுகிறது.
அதாவது இங்கு சேவை சாதிக்கும் பெருமாள்களை தரிசித்தால் அதற்கொப்பான இன்னொரு திவ்ய தேசப் பெருமாளையும் தரிசிக்கும் பேறும் கிடைத்துவிடுகிறது.
ஸ்ரீமத் குடந்தை ஆண்டவன் சுவாமிகள் திருவாக்குப்படி,
மணிமாடக் கோயில் எம்பெருமானை வழிபடுவதால்,
இமயமலை, பத்ரிநாத்திலுள்ள திருபத்ரி நாராயணனை வழிபட்ட பாக்கியம் கிடைக்கும்.

வைகுந்த விண்ணகரப் பெருமாளை வணங்கியோர் அந்த ஸ்ரீவைகுந்தத்து நாயகனையே வணங்கிய அருள் பெறுவர்.
அரிமேய விண்ணகரப் பெருமாள், தன்னை சேவிப்பவர்களுக்கு வடநாட்டிலுள்ள வடமதுரைப் பெருமாளை சேவித்த பாக்கியத்தை அருள்கிறார்.

திருத்தேவனார் தொகை பெருமாள், தன்னுடன், கடற்கரை திவ்ய தேசமான திருவிடந்தைப் பெருமாளையும் சேர்த்து தரிசிக்கும் அருளை நல்குகிறார்.
திருவண் புருஷோத்தம நாயகனை வழிபட்டோர், ராமன் அவதரித்த அயோத்தி திருத்தலத்தை வழிபட்ட பேறு அடைவர்.

செம்பொன்செய் கோவில் பெருமாள், காஞ்சி வரதராஜரை சேவித்த பலனை அளிக்கிறார்.
திருத்தெற்றியம்பலம் அருளாளன், ஸ்ரீரங்கத்து அரங்கனை தரிசித்த சிறப்பு களை அருள்கிறார்.

திருவெள்ளக்குளம் திருமால், திருப்பதி திருவேங்கடவனை வழிபடும் பாக்கியத்தை நல்குகிறார்.
திருமணிக்கூட நாயகன், தானும் காஞ்சி வரதனை வணங்கிய நற்பலன்களை வழங்குகிறார்.

திருக்காவளம்பாடிப் பெருமாள், காஞ்சியிலுள்ள பாடகப் பெருமாளை சேவித்த பலனை அளிக்கிறார்.

திருப்பார்த்தன்பள்ளி எம்பெருமான், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை வணங்கிய பெரும் பேறு அளிக்கிறார்.
இப்படிப்பட்ட பேரருளை பக்தர்களுக்கு வழங்குவதற்காகவே வருடத்துக்கு ஒருமுறை இந்த பதினொரு பெருமாள்களும் ஒன்றாய் கூடும் தலமாகப் பெருமை பெற்றிருக்கிறது மணிமாடக் கோயில்.

நாராயணா ஹரி நாராயணா...!

More from sriram

More from All

MASTER THREAD on Short Strangles.

Curated the best tweets from the best traders who are exceptional at managing strangles.

• Positional Strangles
• Intraday Strangles
• Position Sizing
• How to do Adjustments
• Plenty of Examples
• When to avoid
• Exit Criteria

How to sell Strangles in weekly expiry as explained by boss himself. @Mitesh_Engr

• When to sell
• How to do Adjustments
• Exit


Beautiful explanation on positional option selling by @Mitesh_Engr
Sir on how to sell low premium strangles yourself without paying anyone. This is a free mini course in


1st Live example of managing a strangle by Mitesh Sir. @Mitesh_Engr

• Sold Strangles 20% cap used
• Added 20% cap more when in profit
• Booked profitable leg and rolled up
• Kept rolling up profitable leg
• Booked loss in calls
• Sold only


2nd example by @Mitesh_Engr Sir on converting a directional trade into strangles. Option Sellers can use this for consistent profit.

• Identified a reversal and sold puts

• Puts decayed a lot

• When achieved 2% profit through puts then sold

You May Also Like