#அன்புக்கு_விலையேது

தனியாக கதை சொல்லி கொஞ்ச நாள் ஆகிவிட்டதோ? இதோ ஒரு கதை... அந்த கதை ஞாபகம் வந்ததன் பின்னணி....

போனவாரம் என் மனைவி எங்கள் பேரனிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். என் பேரனும் போய் குடிதண்ணீர் எடுத்து வராமல்

டம்ளரில் குழாய் தண்ணீரை பிடித்து கொண்டு வந்தான். அதை அப்படியே குடித்து விட்டு "சமத்துடா கொழந்த... அடுத்த வாட்டி யாராவது குடிக்க தண்ணீர் கேட்டால் அதோ அந்த குடத்தில் இருந்து தான் எடுத்து கொடுக்கணும். சரியா?" என்று சொன்னாள்.
இதைப் பார்த்து என் மகள், "ஏம்மா... அந்த தண்ணிய குடிச்ச?" என்று கொஞ்சம் கடிந்து கொண்டாள்.

"கொழந்த ஶ்ரீராம் எவ்வளவு பாசமா... ஆசையா கொண்டு வந்தான் தெரியுமா? அவனை disappoint பண்ணக்கூடாது. அதுக்கு தான் ஒண்ணும் சொல்லாமல் குடிச்சேன்" என்றாள்.
ஆஹா.... பாட்டி சொன்ன கதை ஒன்று ஞாபகம் வந்தது... அது....

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.
குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.

நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்று அடைந்தவன், அரண்மனைக்கு சென்று
அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.

மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.
இதை அருகே அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பட்டத்து ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் மொத்த நீரையும் குடித்து முடித்துவிட்டான் மன்னன்.

“பிரமாதம்… உண்மையில் இதுபோல ஒரு சுவையான
ஒரு நீரை நான் இதுவரை என் வாழ்க்கையில் அருந்தியதே இல்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.

இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.
அவன் சென்ற பிறகு, ராணி “இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய் விடுவீர்கள்? என்றாள்

“இல்லை ராணி … நான் மொத்த நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்”
அரசன் சொல்ல, ஆர்வமுடன் எடுத்து குடிப்பவள், ஒரு வாய் குடித்ததும்…. “சே… சே… என்ன தண்ணீர் இது... என்ன இப்படி நாற்றமடிக்கிறது?” என்று கூறி அந்த நீரை உடனடியாக துப்பி விடுகிறாள்.

“தேவி… நீ நீரைத்தான் சுவைத்தாய். ஆனால் #நான்_அவன்_என்_மீது_வைத்திருந்த_அன்பை_சுவைத்தேன்.
பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.
அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும். #அன்பைவிட_இவ்வுலகில்_சுவையானது_வேறு_எதுவும்_இல்லை
நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடை போடுகிறோமே தவிர அதனுள் பொதிந்து இருக்கும் அன்பை அல்ல.

அப்படி செய்வது, #உள்ளிருக்கும்_முத்தை_அறியாமல்_சிப்பியை_ஒதுக்குவது போன்று.

நாமெல்லாம் வாழ்க்கையில் அது போன்று எத்தனை முத்துக்களை தவற விட்டிருக்கிறோம் தெரியுமா?
இனியாவது விழித்துக் கொள்வோம்!

#மனித_உணர்வுகளை_நாம்_மதிக்க_கற்றுக்_கொள்ளவேண்டும்.

#நம்_குழந்தைகளுக்கும்_அவற்றை_கற்றுத்_தரவேண்டும்.

இதயப்பூர்வமாக தரப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும். அதுவே உண்மையான நன்றி.

அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள்.
அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள்.

யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு ‘நன்றி’ சொல்வோம்.

#மனிதம்_மலரட்டும்.

நல்லதையே நினையுங்கள்
நல்லதே நடக்கும்

வாழ்க வளமுடன்
எல்லா நலமுடன்

@aarjeekaykannan @naturaize

More from All

कुंडली में 12 भाव होते हैं। कैसे ज्योतिष द्वारा रोग के आंकलन करते समय कुंडली के विभिन्न भावों से गणना करते हैं आज इस पर चर्चा करेंगे।
कुण्डली को कालपुरुष की संज्ञा देकर इसमें शरीर के अंगों को स्थापित कर उनसे रोग, रोगेश, रोग को बढ़ाने घटाने वाले ग्रह


रोग की स्थिति में उत्प्रेरक का कार्य करने वाले ग्रह, आयुर्वेदिक/ऐलोपैथी/होमियोपैथी में से कौन कारगर होगा इसका आँकलन, रक्त विकार, रक्त और आपरेशन की स्थिति, कौन सा आंतरिक या बाहरी अंग प्रभावित होगा इत्यादि गणना करने में कुंडली का प्रयोग किया जाता है।


मेडिकल ज्योतिष में आज के समय में Dr. K. S. Charak का नाम निर्विवाद रूप से प्रथम स्थान रखता है। उनकी लिखी कई पुस्तकें आज इस क्षेत्र में नए ज्योतिषों का मार्गदर्शन कर रही हैं।
प्रथम भाव -
इस भाव से हम व्यक्ति की रोगप्रतिरोधक क्षमता, सिर, मष्तिस्क का विचार करते हैं।


द्वितीय भाव-
दाहिना नेत्र, मुख, वाणी, नाक, गर्दन व गले के ऊपरी भाग का विचार होता है।
तृतीय भाव-
अस्थि, गला,कान, हाथ, कंधे व छाती के आंतरिक अंगों का शुरुआती भाग इत्यादि।

चतुर्थ भाव- छाती व इसके आंतरिक अंग, जातक की मानसिक स्थिति/प्रकृति, स्तन आदि की गणना की जाती है


पंचम भाव-
जातक की बुद्धि व उसकी तीव्रता,पीठ, पसलियां,पेट, हृदय की स्थिति आंकलन में प्रयोग होता है।

षष्ठ भाव-
रोग भाव कहा जाता है। कुंडली मे इसके तत्कालिक भाव स्वामी, कालपुरुष कुंडली के स्वामी, दृष्टि संबंध, रोगेश की स्थिति, रोगेश के नक्षत्र औऱ रोगेश व भाव की डिग्री इत्यादि।

You May Also Like