இந்தியாவில் ஒரு பரபரப்பான செய்தி வெளிவந்திருக்கின்றது,மிகபெரும் கவனமும் எச்சரிக்கையும் கொடுத்திருக்கும் அந்த செய்தியினை தமிழக ஊடகங்கள் வழக்கம்போல் மவுனமாக்கி ஸ்டாலினாரின் இளமையிலும்,நயந்தாராவின் ஹனிமூன் படங்களிலும் மூழ்கி அவ்வப்போது சமூகநீதியிலும் கலந்து வழிந்து கொண்டிருக்கின்றன‌

அந்த செய்தி உண்மையில் கடுமையானது

சில நாட்களகாவே இந்தியாவில் சர்ச்சையான விஷயம் இரண்டு,முதலாவது கல்கத்தாவில் வங்க அமைச்சர் தன் காதலி மற்றும் அந்த காதலுக்கு அவசியமான பெரும் பணத்தோடு சிக்கியது,இரண்டாவது டெல்லியின் ஆம் ஆத்மி அமைச்சர் சிசோடியாவின் மேலான சர்ச்சைகளும் அதைவிட முக்கியமாக
அவரின் இணைவி அல்லது துணைவி நிஷா மேலான நீதிமன்ற தீர்ப்பும்

2015ம் ஆண்டு குர்கானில் நடந்த கலவரங்களுக்கும் பெரும் குழப்பங்களுக்கும் காரணமான 17 பேரை நீதிமன்றம் தண்டித்து 7 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதித்திருக்கின்றது

இந்த வழக்கில்தான் முக்கிய குற்றவாளியாக நிஷா சிங்
சேர்க்கபட்டிருகின்றார்

குர்கானில் மிகபெரிய வன்முறையினை அவர் கட்டவிழ்த்துவிட்டார் என்றும் தான் எம்.எல்.ஏ ஆவதற்காக மாபெரும் வன்முறைகளில் இறங்கினார் என்றும் நீதிமன்றமே சொல்லியிருக்கின்றது

அந்த குர்கான் கலவரங்கள் கடுமையானவை, கு2015ல் நடத்தபட்ட பெரும் வன்முறையில் பெட்ரோல் குண்டுகள்
வீசபட்டன,காஸ் சிலிண்டர்கள் வெடிக்க வைக்கபட்டன‌

ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சியினை எதிர்த்துத்தான் இக்கலவரம் நடந்தது,அந்த கலவரத்தை திட்டமிட்டு தூண்டியவர் என்றுதான் இப்பொழுது ஆம் ஆத்மியின் நிஷா சிங்கினை நீதிமன்றம் ஆதாரத்துடன் தண்டித்துள்ளது

அந்த அளவு சாட்சிகளும் வாதங்களும்
நிஷாவின் பெரும் குற்றத்தை உறுதிபடுத்துகின்றன‌

நிஷா லண்டனில் படித்து பணிபுரிந்தவர்,இந்திய திரும்பி ஆம் ஆத்மி கட்சியில் தேச சேவை புரிந்து மதசார்பற்ற ஊழலற்ற இந்தியாவினை அமைக்க வந்திருப்பதாக சொல்லிகொண்டவர்

அப்படித்தான் சிசோடியாவினை இரண்டாம் தாரமாக இணைத்தும் கொண்டார்,
இந்த திருமணத்தை நடத்தியவர் ஆம் ஆத்மி தலைவர் ஜெஜ்ரிவால்

ஆக எவ்வளவு பெரிய ரகசிய பின்புலத்துடன் ஆம் ஆத்மி என்பது வெளியே காந்தி முகம் பூசிகொண்டு உள்ளே விஷமாக இருக்கின்றது என்பது தெரிகின்றது

இந்த வழக்கின் நீதிபதியும் சங்கி அல்ல,மோனா சிங் எனும் சீக்கியர்
இந்த வழக்கு ஆம் ஆத்மியின் பயங்கர முகத்தை தோலுரித்து காட்டியிருக்கின்றது,அது எவ்வளவு வன்முறை கொண்ட கட்சி,எவ்வளவு ஆபத்தான கட்சி என்பதை சொல்கின்றது

ஆனால் தமிழக ஊடகங்கள் வழக்கம் போல் அமைதி,இதுவே ஒரு பாஜகவினர் மேல் இப்படி ஒரு குற்றசாட்டு உபியிலோ ராஜஸ்தானிலோ வந்தால் தமிழக ஊடகங்கள்
ஆடி தீர்த்திருக்கும்

கெஜ்ரிவாலின் பின்னணி மர்மமானது,அந்த மர்மத்தில் இன்னும் பயங்கர வன்முறையும் அந்நிய தொடர்பும் கொண்ட கரங்களெல்லாம் ஊடுருவியிருக்கின்றது

இந்த பெரும் அதிர்ச்சியான செய்தியினை தமிழக ஊடகங்கள் சொல்லாததுதான் பெரும் மர்மம்,தமிழக ஊடகங்கள் அப்படித்தான்.

More from All

You May Also Like