நமக்குத் தெரிந்த கோவில்களில் சில விஷயங்கள் நமக்கு தெரியாமல் உள்ளன. அவை:
1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று வித ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாக, உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாக, மாலையில்

நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாக காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.

2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு -
தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.

3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்
பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.

4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி,
மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.

5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், காலில் பச்சை நரம்பும் நன்கு தெரியும். இவரை சற்று தொலைவில்
இருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர் போலவும் காட்சி தருகிறார்.

6. விழுப்புரத்தை அடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப்
பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத் தெரியும்.

7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான்
மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.

8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.

9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர
காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒரு முறை மூல லிங்கத்தின் மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது.

10. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை
கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.

11. உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை மலேசியா தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.
12. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம்
செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.

13. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.

14. ராமநாதபுரத்திற்கு
10கிமீ தூரத்திலுள்ள திவ்ய தேசமான திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.
15. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக்
கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.

16. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக்
கிடைக்காதது.

17. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு
பாக் என்று பெயர்.

18. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு.
19. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் நீங்கி, மனஅமைதியும்
சாந்தியும் கிடைக்கிறது. இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.

20. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன்
இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜபமாலையுடன் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடன் அருள்பாலிக்கிறார்.

21. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப்
பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியிலிருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலன். பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது
22. எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.

23. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டை
கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

More from அன்பெழில்

#ஶ்ரீசக்ரம் ஸ்ரீ சக்கரம் என்பது ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமாகும். ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்துவில் அவள் சூட்ஷம வடிவில், ஸ்தூல ரூபமாக அமர்ந்திருக்க, அவளை காரண வடிவத்தினால் அதாவது மந்திர ஒலியினால் பூஜிக்க வேண்டும். பொதுவாக ஸ்ரீ சக்கரம் என்பது  பரமேஸ்வரனும், பார்வதி


தேவியும் இணைந்து அமர்ந்து உள்ள இடமாகும்.  நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஸ்ரீசக்கரம் வெறும் கோடுகளால் ஆனவை என்று எண்ணி விடக் கூடாது. உயர் அட்சரக் கணிதம், சேஷாத்திரக் கணிதம், விஞ்ஞான அறிவு பூர்வமாக பெற்றவர்கள், மற்றும் இந்தத்

துறைகளில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களால் தான் இந்த ஸ்ரீ சக்கரத்தை வரைய முடியும். ஸ்ரீசக்கரம் என்பது வரைபடம். #மகாமேரு என்பது அதன் உருவம். ஸ்ரீசக்ரத்தை உயரமாகவும், பெரிய வடிவமாகவும் (3D) செய்தால் அது ஸ்ரீமகாமேரு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மேரு மலையின் மீது இருந்த ஸ்ரீ புஷ்பதந்தர்

எனும் மாபெரும் சித்த கணமே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு வடிவம் கொடுத்தார் என்றும், அதையே ஆதிசங்கரரின் குருவான #கௌடபாதர் (பதஞ்சலி முனிவரின் சீடர்) மனதில் கிரஹித்து ஸ்ரீ ஆதிசங்கரருக்கு அதை உபதேசித் தருளினார் என்று  புராணச் செய்தி

குறிப்பிடுகிறது. ஸ்ரீ புஷ்பதந்தர் தெய்வீக கணங்களின் சக்தியை கொண்டவர், சிறந்த சிவ பக்தர். #ஶ்ரீஆதிசங்கரர் காஷ்மீரில் தங்கி இருந்தபோதுதான் தான் ஸ்ரீ சக்கரத்தை வடிவமைத்து சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை இயற்றினார். ஒன்பது கட்டுகள் கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம் தான் அம்பாள் உறையும் இடம். சாதாரண
ஒரு பிரம்மச்சாரி திருமணதிற்கு பணம் வேண்டி ஊரில் பலரிடம் கேட்டு கிடைக்காததால் #சுவாமிதேசிகர் இடம் கேட்க, அவர் ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வேண்டி அருளியது #ஸ்ரீஸ்துதி இது போல் #ஆதிசங்கரர் ஒரு ஏழை பெண்மணிக்கு #கனகதாராஸ்தோத்திரம் மூலம் அனுக்கிரகம் செய்துள்ளார். இருவருமே அந்தத் தங்கக்


காசுகளை கையாலும் தொடாமல் உதவி கேட்டு வந்தவருக்கும், மிக ஏழ்மை நிலையில் உஞ்சவிருத்திக்கு போட ஒரு நெல் மணி கூட இல்லாதவருக்கும் மனம் இரங்கி செல்வம் கிடைக்க அருளினார்கள். வந்தனா அனுக்கிரகம் இது. நமக்காக எழுதிய ஸ்துதிகள் இவை. அவர்களுக்கு இதன் தேவை கிடையாது. தமக்கென்று திரவியமே வைத்து்

கொள்ளாமல் யாசகம் எடுத்து ஜீவித்து வந்தவர் #வேதாந்ததேசிகர் பெரியவர்களாக யார் இருந்தாலும் அவர்களுக்கு விரோதிகள் இருப்பார்கள். அந்தப் பெரியவரை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்களும் இருப்பார்கள். ஸ்ரீவேதாந்த தேசிகருக்கும் இப்படிப்பட்ட விரோதிகள் இருந்தார்கள்

“ஸர்வதந்திர ஸ்வதந்திரர்” என்று போற்றப்படுபவர் தேசிகர், அதாவது வெளி உதவி எதுவும் இல்லாமலே தாமே எதையும் சாதிக்கக்கூடியவராக இருப்பவருக்கு இந்தப் பட்டம் அருளப்படும். அவருக்கு இது பொருந்தாது என உலகுக்குக் காட்டி அவரை அவமானப்படுத்து வேண்டும் என அவர் விரோதிகள் நினைத்து சூழ்ச்சி செய்தனர்

பரம ஏழையான ஓர் அந்தணன் பணம் இல்லாததால் திருமணமே ஆகாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். தேசிகரின் விரோதிகள் அவனிடம் தேசிகரிடம் சென்று திருமணம் நடக்க பண உதவி கேட்க சொன்னார்கள். ‘ஸர்வதந்திர ஸ்வதந்திர’ என்பதால் இவனுக்காக அவர் பிறரிடம் யாசிக்க முடியாது. இவரால் பணம் கொடுக்க முடியாமல்
#மஹாபெரியவா
இல்லற தர்மத்திலே ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஒரு புத்திரன் பிறந்தால் அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யும் கைங்கர்யங்களின் மூலம் தந்தைக்கு நல்ல கதியைத் தருகிறான். ஆண் குழந்தையை பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்துவிடுகிறான். இது சாஸ்த்ரத்தில்


உள்ளது. அப்போ பொண்ணப் பெத்தவாளுக்கு?
"தசாநாம் பூர்வேஷாம் தசாநாம் பரேஷாம்
ஆத்ம நச்ச லோத் தாரண த்வாரா
நித்யநிரதிசய ஆனந்த ஸாஸ்வத விஷ்ணுலோக வாப்யர்தம்
கன்னிகா தானாக்ய மஹாதானம் கர்த்தும்
யோக்யதா ஸித்திம் அநுக்கிரஹாண"
கன்னிகா தானத்தின் போது செய்கின்ற ஸங்கல்ப மந்திரம்.

தசாநாம்

பூர்வேஷாம் என்றால் எனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள். தசாநாம் பரேஷாம் என்றால் எனக்குப் பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்.
ஆத்ம நச்ச என்றால் என்னுடன் சேர்த்து 21 தலைமுறைகளான என்னுடைய குலம் உத்தாரணம் பெறுவற்கும் நிலைத்த விஷ்ணு லோகத்தை நான் அடைவதற்கும் இந்த மாபெறும் தானம்

ஆகிய கன்னிகாதானம் உதவி செய்கிறது. ஒரு நல்ல பெண்ணைப் பெற்றெடுத்து அவளைத் தன் குலத்துக்கு இல்லாமல் வேறு குலத்துக்கு திருமணம் செய்வித்து அந்த குலத்தினுடைய சந்ததியை வ்ருத்தி செய்வதற்கு உதவுகின்றார் என்றால் இந்த தானம் எவ்வளவு பெரிய தானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆண் குழந்தையை

பெற்ற தந்தைக்கு புத் என்கிற நரகம் கிடைக்காமல் பிள்ளை செய்து விடுகிறான். பெண்ணைப் பெற்ற தந்தைக்கு? தனக்கு முன்னால் உள்ள பத்து தலைமுறைகள், பின்னாலே வரக்கூடிய பத்து தலைமுறைகள்,
தன்னுடன் சேர்த்து 21 தலைமுறைகள், நிலைத்த விஷ்ணு லோகத்தை அடைவதற்கு
மாபெறும் தானமாகிய கன்னிகாதானம் உதவி

More from All

https://t.co/6cRR2B3jBE
Viruses and other pathogens are often studied as stand-alone entities, despite that, in nature, they mostly live in multispecies associations called biofilms—both externally and within the host.

https://t.co/FBfXhUrH5d


Microorganisms in biofilms are enclosed by an extracellular matrix that confers protection and improves survival. Previous studies have shown that viruses can secondarily colonize preexisting biofilms, and viral biofilms have also been described.


...we raise the perspective that CoVs can persistently infect bats due to their association with biofilm structures. This phenomenon potentially provides an optimal environment for nonpathogenic & well-adapted viruses to interact with the host, as well as for viral recombination.


Biofilms can also enhance virion viability in extracellular environments, such as on fomites and in aquatic sediments, allowing viral persistence and dissemination.

You May Also Like

This is a pretty valiant attempt to defend the "Feminist Glaciology" article, which says conventional wisdom is wrong, and this is a solid piece of scholarship. I'll beg to differ, because I think Jeffery, here, is confusing scholarship with "saying things that seem right".


The article is, at heart, deeply weird, even essentialist. Here, for example, is the claim that proposing climate engineering is a "man" thing. Also a "man" thing: attempting to get distance from a topic, approaching it in a disinterested fashion.


Also a "man" thing—physical courage. (I guess, not quite: physical courage "co-constitutes" masculinist glaciology along with nationalism and colonialism.)


There's criticism of a New York Times article that talks about glaciology adventures, which makes a similar point.


At the heart of this chunk is the claim that glaciology excludes women because of a narrative of scientific objectivity and physical adventure. This is a strong claim! It's not enough to say, hey, sure, sounds good. Is it true?