#என்று_விழிக்குமோ_ஹிந்து_சமூகம்

ஆளும்/ஆண்ட அரசின் ஹிந்துக்கள் பண்டிகைகள் தொடர்பான ஒரு சார்பு கட்டுப்பாடுகளும்/தடையும்.

தற்போது ஆளும் திமுக அரசு பதவியேற்ற நாள் முதலே தன்னுடைய ஒரே குறி ஹிந்து மத தாக்குதல் என்கிற போக்கில் தான் பயணம் செய்கிறது.

அதற்கு இன்றுவரை வந்த எந்த பண்டிகையும் தப்பவில்லை. வரும் பண்டிகைகளும் தப்ப போவதும் இல்லை.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் இரண்டு திராவிட கட்சிகளும் இந்துக்கள் பண்டிகையை தடை செய்யும் அல்லது கட்டுப்பாடு விதிக்கும் நோக்கிலேயே செயல்படுகின்றன.
ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்பது மட்டும் உண்மை.

இவர்களுக்கு மட்டும் இந்துக்கள் பண்டிகையான போகி பண்டிகையில் ஆரம்பிக்கும் அடாவடி கட்டுப்பாடுகள் கார்த்திகை வரை இருக்கும்.
1. #போகி பண்டிகை

சுற்றுசூழல் பாதிப்பு என முழக்கம் இடுவது. ஆனால் தினசரி தொழிற்சாலை கழிவுகளால் ஏற்படும் பாதிப்பை பற்றி வாயை திறக்க மாட்டார்கள்.
2.#பொங்கல் பண்டிகை

திமுக இது தான் தமிழ் புத்தாண்டு என முரண்பட்ட முன்னெடுப்பை முன் வைப்பது

இதில் திமுக நிலைப்பாடு இன்னும் வேடிக்கையானது. சமத்துவ பொங்கல் என்ற பெயரில் கிறுக்கு தனங்களை அரங்கேற்றம் செய்வது.கடவுள் இல்லை என்பவர்கள் யாருக்கு பொங்கல் வைத்து யாருக்கு நன்றி சொல்கிறார்கள்
சூரியபகவானுக்கு என்று அவர்கள் முட்டு கொடுத்தால் கூட அவர்கள் பாணியிலேயே சொன்னால் சூரியபகவான் வந்து சாப்பிட போகிறாரா, இல்லை இது தான் உங்கள் பகுத்தறிவா அல்லது இது தான் நீங்கள் மூடநம்பிக்கை ஒழிக்கும் லட்சனமா என்ற கேள்வி எழுகிறது.
3. #மாட்டுப்பொங்கல்

இங்க தான் வில்லங்கம் ஆரம்பம் ஒருசாரார் ஜல்லிக்கட்டு பிரச்சனை அரசு கட்டுப்பாடுகள் விலங்கு நல ஆர்வலர்கள் இது போன்ற பிரச்சனை வருடாவருடம் ஆரம்பித்து வேடிக்கை காட்டுவது.
ஆனால் மாடுகளை துன்புறுத்துவது பற்றி வாய்கிழிய பேசுவார்கள் ஆனால் மாட்டுக்கறிக்கு மாட்டினை தினசரி வெட்டுவது பற்றி வாயையே திறக்க மாட்டார்கள். மக்களை குழப்பி விடுவது மட்டும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள்
4. #தைப்பூசம்

நடைப்பாதையாக ஒவ்வொரு வருடமும் யாத்ரீகர்கள் வருவார்கள் என தெரிந்தும் குறைந்தபட்ச ஏற்பாடுகள் கூட செய்யாமல் மக்களை வெறுப்படைய செய்து அறுபடை வீடுகளிலும் கட்டண கொள்ளை, மற்றும் விடுதி கட்டணங்களை ஒழுங்குமுறை செய்யாமல் பகல்கொள்ளை அடிக்க இவர்களே வழிவகை ஏற்படுத்தி தருவது
போன்ற இடர்பாடுகள் தருவது. ஆனால் அரசுக்கு வருவாய் மட்டும் வேண்டும்.

5.#சூரசம்ஹாரம்

பெரும்பான்மை மக்களால் விழாவாக அனைத்து முருகன் ஆலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால் அறுபடை வீடு இருக்கும் மாவட்டத்துக்கு மட்டும் விடுமுறை. மற்ற மாவட்டத்திற்கு இல்லை.
ஆனால் குறைந்த அளவு மக்கள் அனுசரிக்கும் புனிதவெள்ளி க்கு அரசு விடுமுறை. இதில் கூட எவ்வளவு ஏற்ற தாழ்வுகள் என நம்மக்களும் சிந்திப்பது இல்லை.

6. #தெலுங்கு வருட பிறப்பு

தவறாமல் இரு திராவிட கட்சிகளும் கட்டாயம் வாழ்த்து சொல்வார்கள்.
7. #தமிழ் வருடப்பிறப்பு.

ஒருவர் மட்டும் வாழ்த்து சொல்வார். இன்னொருவர் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்.

8.#திருவாரூர் தேர்.

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை இருக்கும்போதிலும், அதனை சித்திரை மாதத்தில் விழா நடத்த இரு கட்சிக்காரர்களும் எப்பவும் குழப்பிக்கொண்டே இருப்பார்கள்.
கடைசி நேரம் வரை மக்களை முடிவுக்கு வரவிடவே மாட்டார்கள்.

9. #மதுரை_சித்திரை_திருவிழா

தென் மாவட்ட மக்கள் மட்டும் அல்லாது அனைவரும் ஆர்வமுடன் செல்லும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், இதிலும் பெரும்பாலும் மக்களை குழப்பி விட்டு வேடிக்கை பார்ப்பது. கட்டுப்பாடுகள் விதிப்பது போன்றனவை தான்
அதுவும் சென்றமுறை கொரானா காரணம் காட்டி சிறு குளம் அளவில் முடித்தாகி விட்டது.

10.#ஆடி_பெருக்கு

பெரும்பாலும் அந்த தினத்தில் ஆற்றில் தேங்கி இருக்கும் தண்ணீர் வைத்து மட்டுமே ஒப்பேற்றும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இப்போது கேட்கவே வேண்டாம் தண்ணீர் வந்தாலும் சுகாதார விதிமுறையை மேற்கோள் காட்டி அதையும் தடுத்தாகி விட்டது.

11.#விநாயக_சதுர்த்தி.

ஒவ்வொரு வருடமும் இதை வைத்து இவ்விரு கட்சிகளும் செய்யும் அரசியல் சொல்லி மாளாது.
நாம் மறந்தது:

(i) நாம் ஹிந்துக்கள்
(ii) நாம் பெரும்பான்மை சமூகம்
(iii) நம்முடைய ஒற்றுமை
(iv)என் கடவுளை வழிபட உங்களிடம் எதற்கு அனுமதி பெற வேண்டும் என்பது.
(v) கடவுள் சிலைக்கு பாதுகாப்பு போலீசார் நிறுத்தி உங்களை அச்சுறுத்தல் மனநிலைக்கு ஏன் கொண்டு வருகிறார்கள் என்பது உணராதது.
(vi) சிலை விஜர்சனம் செய்ய நாள் கட்டுப்பாடுகள் மற்றும் இது வழியாக தான் போக வேண்டும் என கட்டாயப்படுத்துதல் போன்றவை ஏன் என கேள்வி கேட்க தோன்றாதது.

(iv), (v) & (vi) இவை யாவும் எல்லா வருடமும் ஆட்சியாளர்கள் தரும் இன்னல்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயமும் ஒன்று உள்ளது. மக்களை ஒற்றுமையாக பொதுவெளியில் கடவுள் வழிபாடு செய்வதை தடுப்பது மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கி அவர்களை ஒன்று சேர விடாமல் தடுப்பது ஒவ்வொரு வருடமும் அரங்கேறுகிறது.
இவ்வருடம் ஒரு படி மேலே போய் கொரானா காரணம் காட்டி முற்றிலும் தடை என சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் டாஸ்மாக், திரையரங்கு, பேருந்து, மின்சார ரயில், மார்க்கெட், போன்றவற்றிற்கு எல்லாம் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வு கொடுக்கும் போது இதற்கு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது.
கடவுள் இல்லவேயில்லை என்பவர்களும் அப்படித்தான் உள்ளார்கள். கடவுளும் முக்கியம் அதே சமயம் ஈவேரா வும் முக்கியம் என்ற முரண்பட்ட முட்டாள்களும் உள்ளனர்.

12. #தீபாவளி

பட்டாசு வெடிப்பதில் நேர கட்டுப்பாடு விதிப்பு, சுற்று சூழல் மாசு என பக்கம்.
இன்னொரு பக்கம் தீபாவளி நம் பண்டிகையே இல்லை என்று இன்னொரு பக்கம். இதிலும் லைசன்ஸ் கொடுப்பதில் காலம் தாழ்த்தல் பட்டாசு விற்க கடும்கட்டுப்பாடுகள்.

அடுத்து கார்த்திகை, கிரிவலம் போன்றவைகளும் இதில் அடக்கம்.
இது எல்லாம் போதாது என்று திருக்கோவில் அன்னதானம் என்ற பெயரில் இன்னொருபக்கம் இந்துக்கோவில் வருமானங்கள் ஒரு பக்கம் தினசரி கபளீகரம் செய்யப்படுகிறது. இதில் பயன் அடையும்உண்மையான நபர்கள் 0.5% கூட இருக்க மாட்டார்கள்.
இந்த அரசு இந்த அன்னதான திட்டத்தை தேவாலயங்களிலோ அல்லது மசூதியிலோ செயல் படுத்தாது, காரணம் இளிச்சவாய் மக்கள் என்பவர்கள் இந்துக்கள் மட்டுமே. எதற்கும் போராட்டம் செய்ய மாட்டார்கள். நமக்கென் வம்பு என கடந்து போய் விடுவார்கள்.
இந்து சமய அறநிலையதுறையின் கீழ் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மற்றும் பூசாரிகளுக்கு வழங்கப்படும் ஊதியம் கூட சராசரி வாழ்வாதாரத்திற்கே போதுமான அளவில் கொடுக்க முடியாத போது எதற்கு கோவில் வருமானத்தில் பொலிரோ கார், இன்னோவா கார், அதற்கு எரிபொருள், அன்னதானம் போன்ற அனாவசிய செலவினங்கள்
என்று கேட்பவர்கள் கூட இங்கு இல்லை. கோவில் நிலை கோபுரங்கள் சிதிலமடைந்தும், அதில் செடிகள் ஆளுயரத்திற்கும் வளர்ந்தும் காணப்பட்டும் கூட அதை நிர்வாகம் செய்யும் அரசு இடிந்து விழும் வரை வேடிக்கை பார்ப்பது மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளது.
ஒவ்வொரு கோவிலுக்கும் எவ்வளவு விவசாய நிலங்கள் உள்ளது, அடிமனை எவ்வளவு உள்ளது, யாருக்கு எவ்வளவு காலத்திற்கு வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விட பட்டிருக்கிறது, கோவிலுக்கு எவ்வளவு நகைகள் உள்ளது போன்ற எந்த விவரங்களும் வெளிப்படைதன்மையாக இல்லாதது இவர்களுக்கு எல்லாம் சுரண்டுவதற்கு ஏதுவாக
உள்ளது.

இதை இவர்களால் எப்படி சாத்யமாக்கப்படுகிறது என்பதை பார்த்தால் நடுநிலை ஹிந்துக்களின் மவுனம் மற்றும் கையாலாகாதனம் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இந்துக்களை பிளக்கும் கோடாரிக்கு கைபிடியாக அதே இந்துக்களே உள்ளது தான் உச்சகட்ட வேதனை.
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்து கொண்டே தான் இருப்பான்.

பின் குறிப்பு

மேற்குறிப்பிட்ட மாதங்கள் இடையில் தான் மாற்றுமத பண்டிகையும் வருகிறது. அதற்கு எவ்விதமான கட்டுப்பாடுகளோ இடற்படுகளோ ஏற்படா வண்ணம் அனைத்து கட்டுப்பாடுகளும் ஆளும்/ஆண்ட ஆட்சியாளர்கள் கடைபிடித்து வருகினர்.
#எல்லாவருடமும்_இந்துக்களை_முட்டாள்களாகவே_பார்ப்பது_இவர்கள்_வாடிக்கை

More from All

You May Also Like