பொன்னியின் செல்வன் கதை உண்மை கதையா என்றால் வரலாறு சொல்வது இதுதான்

இடைக்கால சோழர்கள் இருந்தது நிஜம்,அங்கு ஆதித்த கரிகாலன் கொல்லபட்ட குழப்பத்தில் ராஜராஜசோழன் ஆட்சிக்கு வந்ததும் நிஜம்

அது சேரர், சோழர், பாண்டியர் என மூவரும் ஒருவரை ஒருவர் முறைத்தும் அரவணைத்தும் ஆண்ட வகையில்

அவரவர் நலனை காப்பதில் சரியாக இருந்தார்கள்

உதாரணமாக சேர நாட்டுக்கு அரிசியும் இதர தேவைகளும் பாண்டிய சேர நாட்டில் இருந்துதான் செல்லவேண்டும், அதே நேரம் சோழர்களுக்கு யானையும் இதர விஷயங்களும் சேர நாட்டில் இருந்துதான் வரவேண்டும்
பாண்டியருக்கு கிழக்கே கடலாடுவதில் சோழரோடு சில உரசலகள் உண்டு, இன்னும் பல உண்டு

இதனால் மூவரும் அடிக்கடி மோதுவார்கள், எவன் வலுத்தவனோ அவனை இருவர் சேர்ந்து எதிர்த்து ஒரு சமநிலை பேணுவார்கள்

அப்படி சோழ வம்சத்தை பாண்டியரும் சேரரும் சேர்ந்து எதித்த போரில் மதுரை சுந்தரபாண்டியனை
ஆதித்த கரிகாலன் எனும் சோழ மன்னன் மதுரையில் வென்று பின் காடுகளில் பதுங்கியிருந்த பாண்டியன் தலையினை வெட்டி எறிந்தான்

தங்கள் ஆதரவு பாண்டியனை தங்களை ஆதரித்த பாண்டியனை சோழன் வெட்டியதை அறிந்த சேர தேசத்து ராஜகுருக்கள் ஆதித்த கரிகாலனை சோழ நாட்டுக்குள்ளே வெட்டி கொன்றார்கள்
அந்நேரம் பெரும் குழப்பம் நீடித்தது, இனி எதிர்காலம் என்னாகும்? யார் அடுத்த அரசன்? எதிரிகள் வந்தால் என்னாகும் என பலத்த குழப்பமான காலமது, சேர பாண்டியரோடு சிங்களவர்களும் சேர்ந்து கொண்டார்கள்

அப்படிபட்ட நேரம் எல்லோரும் அடுத்த சோழ மன்னன் யார்?
இனி எதிரிகளை எப்படி சமாளிப்போம் என குழம்பிய நேரம் அந்த அருண்மொழி தேவன் மாறுவேடத்தில் தமிழகம் எங்கும் சுற்றினான்

பாண்டியருக்கு ஆதரவு சேரர்கள், சேரர்களின் பலம் அவர்களின் ராஜகுருக்கள் நடத்தும் கடிகை எனும் பயிற்சி கல்லூரிகள் என்றெல்லாம் ஒவ்வொரு தகவலாக சேர்த்தான்
இவர்களோடு சிங்களவரும் இருக்கும் எல்லா பலத்தையும் அளவிட்டான்

எங்கே யாரை எப்படி அடித்தால் சோழ ராஜ்யம் நிலைக்கும் என முழுவதும் திட்டமிட்ட பின்புதான் அரியணை ஏறினான், மடமடவென எதிரிகளை நொறுக்கினான்

சேரநாட்டின் "காந்தளூர் சாலை" கடிகை நொறுக்கபட்டது அதனால்தான்,
அது நொறுங்கிய பின்புதான் பாண்டியர் பலம் குறைந்தது

பின் அனுராதபுரத்தை அழித்து சிங்களவரை அடக்கினான், வேர் வரை அவன் பிடுங்கி போட்டதால் அவனுக்கு எதிரி இல்லை சோழநாடு நிலைத்தது, அவன் தஞ்சை பெரிய கோவிலை கட்டினான் இன்னும் அவன் மகன் பெரும் ராஜ்ஜியம் அமைத்தான்

இதுதான் வரலாறு
இந்த வரலாறு தஞ்சை ஆலய கல்வெட்டு இன்னும் பல இடங்களில் கல்வெட்டாக இருந்தது, சுருக்கம் இவ்வளவுதான், சில இடங்களில் இவன் தங்கை குடும்பம், படைதளபதி அவர்கள் செய்த போர்கள், எதற்காக இந்த கல்வெட்டு என சில குறிப்புகள் உண்டு அதை தாண்டி எதுவுமல்ல‌

1300களில் மாலிக்காபூர் படையெடுத்து
சோழ அரசுகளை குழப்பி போட்டபின் மெல்ல மெல்ல அவர்கள் கீர்த்தி மங்கிற்று, பின் துக்ளக் வந்தான் அவனை நாயக்க இந்து மன்னர்கள் வந்து ஒழித்தாலும் நாயக்கர் ஆட்சி தஞ்சையில் நிலைத்தது அவர்கள் தமிழர்கள் அல்ல என்பதால் இந்த கல்வெட்டுக்களை கண்டுகொள்ள யாருமில்லை
அரச தர்மபடி ஒரு புது அரசன் வரும்பொழுது பழைய அரசன் புகழை மறைக்கவேண்டும், இல்லாவிடில் புதிய ஆட்சி நிலைக்காது, மக்கள் பழைய வரலாற்றை மறந்தால் ஒழிய அவன் ஆளமுடியாது

இந்த ஆட்சி 200 ஆண்டு நீடித்த நிலையில் நாயக்கர்களுக்குள் மோதல் வந்தபொழுது பாமினி சுல்தான்கள் தலையிட முனைந்தனர்,
ஆனால் சத்ரபதி சிவாஜியின் தகப்பன் ஷாஹாஜி தஞ்சாவூரை தன் கட்டுபாட்டில் கொண்டுவந்தான், சரபோஜிக்கள் அவன் வம்சம்

ஆக தமிழக கல்வெட்டு நாயக்கரிடம் மறைந்து பின் மராட்டியர்களால் இன்னும் மறக்கபட்டது, அதன் பின் வெள்ளையனும் வந்தான்

இக்காலத்தில் தஞ்சை கோவில் கலையிழந்து கிடந்தது,
பெரும் அதிசயமான அக்கோவில் வரலாறு தெரிந்தால் சோழர் வரலாறு வெளிவரும் அது தனக்கு ஆபத்து என ஆள்பவர் கருதினார்களோ அல்லது அக்கோவிலின் வழமையான நம்பிக்கை பயமுறுத்தியதோ என்னமோ அது கவனிப்பாரற்று போனது

வவ்வாலின் கழிவுகளே சுவர் எழுப்பும் வண்ணம் காலம் கொடுமையாய் இருந்தது
ஒரு கட்டத்தில் இக்கோவிலை கட்டியது யார்? எதற்காக கட்டினார்கள் என்பதே யாருக்கும் தெரியா நிலை ஏற்பட்டது, அந்நிலையில்தான் ஆங்கில ஆட்சி வந்தது

அவர்கள் கொஞ்சகாலம் இருந்திருந்தால் தஞ்சை பெரிய கோவிலையும் இடித்து பாலம் படித்துறை என கட்டியிருப்பார்கள்,
ஏற்கனவே பல கல்வெட்டுக்கள் கல்லணை கால்வாய் தோண்டபட்டபொழுது படிதுறையாகி அழிந்தன, கோவில் மட்டும் எஞ்சியது

போர்ச்சுகீசியரும், பிரான்சும், பிரிட்டனும், டச்சும் இந்தியாவின் செல்வத்தை குறிவைத்தபொழுது ஜெர்மன் மட்டும் இந்தியாவின் அறிவு செல்வத்தை குறிவைத்தது
ஜெர்மானியர்கள் சமஸ்கிருதம், தமிழ் முதலான மொழிகளை கற்றும், கல்வெட்டுக்களை படிக்கும் கலையும் ஓலைசுவடிகளை வாசிக்கும் முறையினையும் கற்று இங்கு வந்தனர்

அப்படி வந்த ஜெர்மானியன் "Eugen Julius Theodor Hultzch , இவனேதான் இந்தியாவில் பெரும்பான்மையான கல்வெட்டுக்களை படித்து விளக்கினான்
ஜெர்மானியரில் பலர் இந்திய பண்டைய நூலகங்களில் மூழ்கி கிடந்தனர், தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் இருந்து அவர்கல் காப்பி அடித்ததும், சுவடிகளாக தூக்கி சென்றதும் ஏராளம், அந்த அறிவு செல்வங்கள்தான் ஜெர்மனை முதலில் விஞ்ஞானத்தில் முன்னேறிய நாடாக்கிற்று
உலோகவியலில் இன்றும் அவர்கள் கில்லாடி, கல்லையும் இரும்பையும் செதுக்கும் இந்திய உளிகளை பற்றிய சிந்தனை அவர்களை தேட சொன்னது, அப்படிபட்ட உலோகங்கள் சாத்தியமா என வந்தவர்கள் இந்திய அறிவினை அள்ளி அள்ளி சென்றார்கள்

விமான சாஸ்த்ரம் முதல் எவ்வளவோ அள்ளி சென்று ஆராய்ந்தார்கள்,
நிச்சயம் இந்திய நூல்களையும் கல்வெட்டையும் படித்த பின்புதான் எழுந்தார்கள் அந்த எழுச்சித்தான் இரு உலக போர்களை கொடுத்தது

இந்த ஜெர்மானியர்கள்தான் தஞ்சை கோவிலை கட்டியது ராஜராஜன் என நெடுநாளைக்கு பின் சொன்னார்கள், அவர்கள் அறிந்ததை ஆவணப்படுத்தினார்கள்
அது இடஒதுக்கீடு இல்லா காலம் என்பதால் திறமையானவர்கள் அன்று ஆய்வுக்கு வந்தார்கள், அப்படி வந்தவர் நீலகண்ட சாஸ்திரியார்

இவர் நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சியினை சேர்ந்தவர் , சென்னை பல்கலைகழக சரித்திர துறை தலைவரானார், இந்த கல்வெட்டுக்களை எல்லாம் படித்து "தென்னிந்திய வரலாறு" எனும்
தொகுப்பாக்கினார்

அந்த தொகுப்புத்தான் 1940களில் பிரபலமானது, சோழர் மட்டுமல்ல பாண்டியரின் வரலாறும் அப்பொழுதுதான் வெளிவந்தது

1950களில் பத்திரிகை துறையில் ஆதிக்கம் செலுத்திய பலர் சோழநாட்டை சேர்ந்தவர்கள், எஸ்.எஸ் வாசன் அதில் முக்கியமானவர், சோழநாட்டின் வரலாறுகள் பல ஒவ்வொன்றாக வந்தன‌
கல்கி அப்படித்தான் சில வரலாற்று தரவுகள் அடிப்படையில் பொன்னியின் செல்வன் என அந்த ராஜராஜன் கதையினை பிரமாண்டமாக கற்பனையாக எழுதினார்

சில தரவுகள் அடிப்படையில் அவரே எழுப்பிய காவியம் அது

ஈரோட்டு ராம்சாமி தன் கனவில் திராவிடம் கண்டபொழுது கல்கி இந்த பெரும் காவியத்தை 4 ஆண்டுகள் எழுதினார்,
அது அவருக்கு தீரா புகழை கொடுத்தது

இவ்வரிசையில் சாண்டில்யன் எனும் பாஷ்யம் அய்யங்காரும் தன்னை இணைத்து கொண்டார், சில வரலாற்று தரவுகளில் காதல், குடும்பம், நட்பு, பகை, அரசு என சிறகுகளை கட்டி பறக்கவிட்டார்

எத்தனையோ பேர் எழுதினாலும் கல்கியின் பொன்னியின் செல்வன் தனித்து நிற்கின்றது,
இவர்கள் வழியில் வந்த பாலகுமாரனும் "உடையார்" என தன் முத்திரையினை பதித்தார்

நிச்சயம் சோழநாட்டின் ராஜராஜனுக்கு குறையாதவன் பாண்டிய ஜடாவர்ம சுந்தரபாண்டியன் ஆனால் அவன் கதை இந்த அளவு வெளிவரவில்லை காரணம் பாண்டிய நாட்டு பத்திரிகைகள் குறைவு பிரதான தினதந்தி கூட "சதக் சதக்" உல்லாசம்" என
நிறுத்திகொள்ளும், இம்மாதிரி வர வழிசெய்யாது

இப்படி வந்த கதைதான், உண்மை வரலாற்றின் அடிதளத்தில் கற்பனையாய் எழுப்பபட்ட காவிய மாளிகை அது

ஆனால் எது எப்படியாயினும் அவர்கள் இந்துக்கள் முழு சிவபக்தர்கள் என்பது நிஜம்,
கற்பனைகளில் வந்தாலும் அந்த பாத்திரங்கள் அன்று வாழ்ந்தது உண்மை அவர்கள் முழு இந்துக்களாக அந்த அடையாளத்தோடு இருந்தது உண்மை

பொன்னியின் செல்வன் டிரைலரிலும் அந்த ஜெர்மானியனுக்கும் நன்றி இல்லை, கல்லிடை குறிச்சி நீலகண்ட சாஸ்திரிக்கும் நன்றி இல்லை, கல்கிக்கும் நன்றி இல்லை
திரையுலகம் நன்றி இல்லாததுதான் ஆனால் அப்படத்தில் சோழர்கள் இந்து எனும் அடையாளத்தையும் ஏன் வலுகட்டாயமாக இழக்கவைக்கபட வேண்டும் என்பதுதான் தெரியவில்லை

More from All

You May Also Like