ஸ்ரீவைஷ்ணவம் – ராமானுஜர்

ஸ்ரீவைஷ்ணவம் என்பது ராமனுஜர் தோற்றுவித்த மதத்தின் பெயர், இந்த மதத்தை சேர்ந்தவர்களை தான் நாம் இன்று தென்கலை வைணவர்கள் என்கிறோம்.

இந்த தென்கலை மற்றும் வடகலை வைணவர்கள் என்பதை சுலபமாக அடையாளம் புரிந்துகொள்ள அவர்களின் நாமம் இடும் முறையில் அறிந்து கொள்ளலாம். U வடிவம் வடகலை Y வடிவம் தென்கலை.
இதில் வடகலை வைணவம் முழுக்க முழுக்க வைதீகம், பார்ப்பனீயம், மனு சாஸ்திரம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. Conservative Group. ஆனால் ராமானுஜர் தோற்றுவித்த தென்கலை வைணவம் என்பது அப்படி அல்ல எல்லா மக்களையும் உள்ளடக்கி கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது Liberal Group
இப்படி ஒருவித Liberal Sect-ஆக இருந்ததாலேயே அதை தென்கலை என்றனர், தெற்கு என்றால் கீழே, கீழானது என்றும் ஒரு மறைமுக அர்த்தம் அதில் உண்டு. அதுவும் பார்பனர் விளையாட்டே.
இன்றும் வடைகலை வைணவர்கள், தென்கலை வைணவர்களிடம் பெண்கொடுப்பதோ பெண்எடுப்பதோ வைத்து கொள்ள மாட்டார்கள் ஏன் என்று இந்த பதிவின் இறுதியில் எல்லோரும் புரிந்து கொள்வீர்கள்
ராமானுஜர் உருவாக்கிய மதத்தின் பெயர் ஸ்ரீவைஷ்ணவம் அவரது தத்துவங்களை விஷிஷ்டாத் வைதம் என்று அவர் அழைத்தார்.
விஷிஷ்டாத் வைதம் என்ற வார்த்தைக்கு தரமான, சிறப்பு தன்மை கொண்ட அத்வைதம் என்று பொருள், அத்வைதம் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டது. அதை தரமானதாக மாற்றிவிட்டதாக ராமனுஜர் அறிவிக்கிறார்.
இந்த விஷிஷ்டாத்வைதம், பிரஸ்தான திரியை (சிறப்பான மூன்று நூல்கள் என்று பொருள்) எனப்படும் உபநிஷத்துகள், பகவத்கிதை மற்றும் பிரம்மா சூத்திரம் ஆகிய மூன்று நூல்களை எப்படி சரியான முறையில் பொருள் கொள்ளவேண்டும் என்பதன் விளக்கமாகும்.
அதாவது தப்புதப்பாக அவற்றில் உண்மையில் சொல்லியிருந்தாலும் நாம் எப்படி சரியான பொருளை புரிந்துகொள்ளவேண்டும் என்ற விளக்கங்கள் கொண்ட வேதாந்தமே விஷிஷ்டாத்வைதம்.
இந்தியாவில் வேதகாலங்கள் ஒருமுடிவுக்கு வந்தது கிமு.600 – 500களில், வடஇந்தியாவில், புத்தரில், தொடங்கி, மகாவீரர், அஜிவகர், சார்வாகர், அஜிதா கேசகம்ப்ளின், அஞ்சனர் போன்ற பலர், கிமு.600 – 500 களிலேயே வேத மறுப்பு கருத்துகளை முன்வைக்க தொடங்கினர்,
பார்பனரும் வேதகோஷங்களும், அவற்றில் உள்ள புரட்டுகளையும் விளக்கி, அவையெதுவுமே இல்லாமல் வாழும் முறை கடவுளை ஒரு பூசாரி இல்லாமல் வணங்கும் முறை போன்றவற்றை மக்களுக்கு போதித்தனர்.
அதிலும் அந்த காலத்திலேயே அஜிவகர், சர்வாகர், அஜிதா கேசகம்ப்ளின், அஞ்சனர் போன்றவர்கள் கடவுளே தேவையில்லை என்று நேரடியாக நாத்திக பொருள்முதல் வாதங்களை மக்களிடையே பரப்பினர்.
அப்போது பார்பனருக்கு தங்கள் வேதமதத்தை மீட்டுருவாக்கம் செய்ய பழைய வேத மந்திரங்கள் போதவில்லை. ஆகையால், அவர்களும் கருத்தியல்களை(Concepts & Theories) உருவாக்க தொடங்கினர், அந்த காலத்தில் அரசரின் உதவி இல்லாமல் ஒரு மதத்தை பரப்ப இயலாது,
அதற்கான சூழ்நிலை, அவர்களுக்கு முதலில் கிமு185-ல் மற்றும் பிறகு குப்தர்களின் காலமான கிபி 240-லும் கிடைத்தது. அந்த காலக்கட்டத்தில் அவர்கள் உருவாக்கிய கருத்தியல்களை நாம் ஆறாக பிரிக்கலாம்.
அப்போது வேத மறுப்பு சித்தாந்தங்களாக இருந்தவை

பௌத்தம்
சமணம்
யோகம்
அஞ்சனம்
அஜிவகம்
சர்வாகம்
இவற்றை மறுத்து மீண்டும் வேதகால மதத்தை மீட்டுருவாக்கம் செய்ய உருவாக்கப்பட்ட தத்துவங்கள், பின்வருவன

நியமம்
வைசேசிகம்
சம்கியம்
யோகம் (வேத மறுப்பு சித்தாந்ததிலிருந்து நேரடியாக திருடப்பட்டது)
மீமாம்சம்
வேதாந்தம்
இவற்றை பற்றி விளக்கமாக வேறு ஒரு பதிவில் காண்போம். இதில் ஆறாவதாக சொல்லப்படும் வேதாந்தம் என்பதே இந்து மதத்தின் ஒவ்வொரு பிரிவுக்கும் அதாவது சைவம், வைணவம், போன்றவற்றில் எப்படி கடவுளை வணங்குவது, கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை பற்றி விளக்கும் பகுதி.
இங்கே நாம் ஒன்றை கவனித்தால், சைவம், வைணவம், சாக்தம்(சக்தி வழிபாடு), கெளமாரம்(முருகன் வழிபாடு) இப்படி பலவித மத வழிபாடு இந்தியாவில் இருந்தாலும், எல்லா முறைகளையும் சேர்த்து இந்து மதம் என்று சொல்வதன் காரணமே,
இந்த ஆறாவது பகுதியை விட்டுவிட்டு மற்ற ஐந்தையும் பொதுவாக மாற்றி காட்டிய பார்பன தந்திரமே. கொஞ்சம் விட்டால் இயேசு, அல்லா எல்லோரையும் இந்த ஆறாவது பகுதியான வேதாந்தத்தில் சேர்த்துவிட்டு அவர்களையும் இந்து கடவுள் என்று சொல்வார்கள்
இந்த பார்பனர்.

நல்லவேளை அதற்குள் மக்கள் பலபகுதிகளுக்கு பயணித்து உலகின் மற்ற பகுதிகளுக்கு நேரடி தொடர்பு ஏற்பட்டதால் பார்பனரால் அல்லா ஏசுவை எல்லாம் உள்வாங்க முடியவில்லை,
ஆயினும் அவர்கள் அந்த முயற்சியை செய்யாமல் இல்லை. பவிஷ்ய புராணம் என்று ஒரு நூல் உள்ளது, இது எப்போது எழதப்பட்டது என்று சரிவர தெரியவில்லை,
இதை கிபி200-ல் எழுதியது என்று சொல்வார்கள், அக்பர் தீன்-இ-லாஹி மதம் கண்டுபிடித்தபோது எழுதப்பட்டது என்றும் சொல்வார்கள், வேறு சிலர் ஆங்கிலேயே பாதிரியார்கள் காலத்தில் எழுதப்பட்டது என்றும் சொல்வார்கள்
இந்த நூலில், பிரதி சரக பர்வம் பாகம், பகுதி-4 , 28-ஆம் பாடல் என்ன சொல்கிறது என்றால்.

"இந்திரியாணி தமிதவா
ஏஹாயாத் மத்தியான பாராயண :
தஸ்மாத் ஆதாமா நாமாஸ்ய
பத்னீ ஹவ்யவாதி ஸ்ம்ரிதி " – பாடல் இன்னும் நீளமாக போகும்
அந்த பகுதியின் மொத்த பொருள் என்ன வென்றால்

பரதான் நகரின் கிழக்கு பகுதியில் கடவுளால், உருவாக்கப்பட்ட ஒரு பெரிய தோட்டம் இருந்தது, அங்கே இருந்த ஒரு பாபவிருக்ஷத்தின், கீழே ஆதாமா என்ற பெயருடைய புருஷன், தன் மனைவி அவ்வாவதியுடன் வாழ்ந்துவந்தான். ஒரு நாள் கலிபுருஷன், பாம்பு வடிவில் வந்து,
ஆதாமாவை அந்த பாபவிருக்ஷத்தின் கனியை உண்ண தூண்டினான், அவர்கள் இருவரும் அதுவராய் வெறும் காற்றையும் உதும்பரா என்ற இலைகளையும் பட்டுமே உண்டு வாழ்ந்தனர். களிபுருஷனின் தூண்டுதலில் அந்த கனியை உண்டதால் அவர்கள் விஷ்ணுவின் கோபத்துக்கு ஆளானார்கள், அந்த தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்டார்கள்.
பவிஷ்ய புராணம், பாகம் 3, சுலோகம் 3, பாடல் 5-8 – இன்னும் மிக சிறப்பு

ஏதஸ் மின்னந் தாரா மிலேச்ச
ஆச்சார்யண ஸமின் வித
மஹாமத் இதிக்கியாத
சிஷ்ய சாகா ஸமன்வித
நிருஷ் சேவ ஹமாதே
மருஸ் தல நிவாஸினம்
இதன் பொருள் ஒரு அன்னிய நாட்டில் ஓர் ஆன்மீக சீர்த்திருத்தவாதி, தமது சிஷ்யர்களுடன் வருவார். அவர் பெயர் மஹாமத். அவர் பாலைவனத்தைச் சார்ந்தவராக இருப்பார்.
அடுத்து பவிஷ்ய புராணம், பாகம் 3, சுலோகம் 25, பாடல் 3

லிங்கச்சேதி சிகா ஹுன
சுமக்சுறு தாரி ஸாதூஷக
உச்சாலாபி ஸாவ பஹீ
பவிஷ்யதி ஜனோமம
முஸலை நைஸ் மஸ்கார
அவர்கள் லிங்கச்சேதம் (சுன்னத்) செய்வார்கள். தலையில் குடுமி இருக்காது. தாடி வைத்திருப்பார்கள். சப்தமிட்டு அழைப்பார்கள் (பாங்கு). முஸ்லிம் என்று அறியப்படுவார்கள்

இது போல இன்னும் நிறைய உண்டு, பிறகு நாம் ராமானுஜரை விட்டுவிட்டு புரட்டு வேதங்களின் பின்னே போய்விடுவோம்
இன்னும் நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையென்றால் கந்தகுரு கவசம் என்ற நூலில் வரும் வரிகள் உங்களுக்கு விளக்கும். அது

வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே
வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம்
சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான்
அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே
அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய்

இந்த பாடலில் வேதாந்த ரகசியம் என்பதே இந்த பார்பனர் சூழ்ச்சியை புரிந்து கொள் என்பதே.
சரி இந்த வேதாந்தம் என்றால் என்ன?

வேத அந்தம் என்றால் வேதத்தின் முடிவு, அதாவது இனி வேதம் வேலைக்கு ஆகாது வேறு வழியை பார்க்க வேண்டும் என்று பார்பனன் முடிவு செய்து எழுதத் தொடங்கிய நூல்கள் என்று அர்த்தம்.
பார்பனரிடம் கேட்டால் இல்லை அது வேதத்தின் மூலம் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய முடிவான பொருள் என்பார்.

விஜயம் என்றால் வெற்றி என்பான், அஜயம் என்றால் தோல்வி என்பான்
அதே ஒரு நபருக்கு பெயர் வைக்குக் போது விஜய் என்றால் வெற்றி பெற்றவன் என்பான் அஜய் என்றால் எதிரிகளுக்கு தோல்வியை தருபவன் என்பான், நாம் கேள்வி கேட்டால் நம்மை சூத்திரன் பஞ்சமன் என்பான்
இதுவெல்லாம் சரி, ராமானுஜர் பற்றி சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு வேறு எதோ சொல்கிறாயே என்று கேட்கிறீர்களா, வெறும் வாழ்கை வரலாறு என்றால் நாலு வரியில் எழுதலாம் ஆனால் இந்த பின்புலம் தெரிந்தால் தான் ராமானுஜர் செய்த சில சிறப்பான விஷயங்களை பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும்.
இனி வேதம் வேலைக்கு ஆகாது வேறு வழியை பார்க்க வேண்டும் என்று பார்பனன் முடிவு செய்து எழுதிய நூல்களை வேதாந்தம் என்று சொன்னார்கள், அந்த வேதாந்தங்கள் அதாவது கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை சொல்லும் வேதாந்தங்களை மறுபடியும் கீழே உள்ளது போல பிரிக்கிறார்கள்
1. பிரம்ம சூத்திரங்கள்
2. அத்வைதம்
3. விஷிஷ்டாத்வைதம்
4. துவைதம்
5. சுத்தாத்வைதம்
6. பெஹடபேதம்
இதில் பிரம்ம சூத்திரங்கள் என்றால் என்ன என்று கேட்டால் ஆதிசங்கரர் அதை தான் மட்டுமே படித்தேன் என்று சொல்லுவார், அதை பற்றி அடுத்த ஆதிசங்கரர் பற்றிய தனி பதிவில் காண்போம். இரண்டாவது ஆதிசங்கரரின் தத்துவம் மூன்றாவது ராமானுஜரின் தத்துவம்.
இப்பொது உங்களுக்கு புரிந்திருக்கும் நான் என் இவ்வளவு பெரிய முன்னோட்டம் கொடுத்தேன் என்று .

வேதகால வைதீக மதங்கள், பெரிய அளவில் மறுஉயிர் பெற்றது ஆதிசங்கரர் காலத்தில் தான், அதாவது பௌத்த சமண மதங்களின் வருகையால் பார்பனர் சமூகத்தில் தாங்கள் இழந்த முக்கியத்துவத்தை மீண்டும் மீட்டு
கொடுத்தது ஆதிசங்கரன் அதனால் தான் இன்றும் பார்பனர் அவரை ஜெகத்குரு என்று போற்றுவதற்கு காரணம்.

ராமனுஜரின் காலம் கிபி 1017-1137 அதாவது சுமார் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று சொல்லுவார்கள். இவர் நமது ஸ்ரீபெரும்பதுரில் ஒரு பார்பன குடும்பத்தில் பிறந்தார்,
தந்தை கேசவ சாமயாஜி, தாய் காந்திமதி. தன 16ஆவது வயதில் ரக்ஷாம்பாள் என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். அதே காலகட்டத்தில் தந்தையின் மறைவுக்கு பின், உயர்கல்வி கற்க காஞ்சி மாநகருக்கு செல்கிறார்.
அங்கே அவர் யாதவ பிரகாசர் நடத்திய அத்வைத குருகுலத்தில் சேர்கிறார். அங்கே அவர் பயலும் காலத்தில், அவருக்கும் ஆசிரியர் யாதவ பிரகாசருக்கும் அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்படும், பெரும்பாலான வாதங்களில் ராமானுஜரே வெல்வார்,
இது அடிக்கடி நடக்க, எரிச்சல் அடைந்த ஆசிரியர் யாதவ பிரகாசர், ராமானுஜரை வேறு சில சீடர்களோடு காசி யாத்திரை சென்று வரும்படி சொன்னார், அனால் வேர் நபர்களிடம் சொல்லி செல்லும் வழியிலேயே ராமானுஜரை கொன்றுவிடும்படி ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால் அதே குருகுலத்தில் படித்த கோவிந்த பட்டன் என்ற அவரது மற்றொரு மாணவர் இந்த கொலைச்சதியை ராமானுஜருக்கு சொல்ல, அவர் தப்பி வேங்கடம் பகுதியில் உள்ள காட்டுக்குள் ஓடிவிடுகிறார், இங்குதான் அவர் முதலில் அங்கிருந்த ஆளரவமற்று இருந்த அவலோகிதீஸ்வரர் கோயிலை முதலில் கண்டுகொள்வது.
அங்கே சில வேடுவர்களின் உதவியுடன் மீண்டும் காஞ்சி வருகிறார். தன் கொலை முயற்சி வெளியே தெரியாமல் இருக்க ஆசிரியர் யாதவ பிரகாசர், அவரை மீண்டும் குருகுலத்தில் சேர்த்து கொள்கிறார். ஆனால் ஆசிரியருக்கும் மாணவருக்கும் கருத்துமோதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில்
அவர் குருகுலத்தை விட்டு வெளியேறி, காஞ்சியில் உள்ள கருடராஜா கோயிலில் பூசாரியாக வேலைக்கு சேர்கிறார்.சைவ குருகுலத்தில் பயின்ற, ஆசிரியர் மீது கொண்ட வெறுப்பால் வைணவ கோயிலில் பூசை செய்ய சென்றுவிடுகிறார்,அங்கே பூசை நேரம் தவிர பிற நேரங்களில் சில மாணவர்களுக்கு, பாடம் சொல்லிக்கொடுக்கிறார்
இவரது போதனைகள் எல்லாமே, வேதாந்தம் தத்துவம் இவைகளை தாண்டி, கடவுள் பக்தியே சிறந்தது, என்பதே, குறிப்பாக பிற மனிதர்களை நேசிக்கவேண்டும், அன்பு காட்டவேண்டும் என்பதே இவரது போதனைகள், இது சக பார்பனருக்கு எரிச்சலை கொடுத்தது.
இந்த காலகட்டத்தில் இவர் புதிதாக வைணவ மதத்துக்கு வந்தவர் என்பதால், இவருக்கு வைணவ நியமம் படி மந்திர தீக்ஷை (மந்திரம் உபதேசம் செய்து புனிதம் ஆக்குவது) செய்யப்படவேண்டும். இந்த உபதேசத்தை கொஷ்டிபுரம் (இன்றைய சிவகங்கை மாவட்டம்,
திருப்பத்தூருக்கு அருகே உள்ள திருகோஷ்டியூர்) என்ற ஊரில் உள்ள கொஷ்டிபூரனர் (பின்னாளில் இவரே திருகோஷ்டியூர் நம்பி என்று அழைக்கப்படுகிறார்.) என்பவரிடம் சென்று சிக்ஷை பெரும் படி மகாபூரனர் என்பவரால் அறிவுறுத்தப்படுகிறார்.
ராமனுஜரும் பலமுறை கொஷ்டிபூரனரிடம் சென்று தனக்கு மந்திர உபதேசம் செய்ய வேண்டுகிறார், ஆனால் ராமனுஜரின் பார்பன வேத விரோத மனப்பான்மை பிடிக்காத காரணத்தால், சிக்ஷை அளிக்க மறுத்துவிடுகிறார், இறுதியாக 18ஆவது முறை, ராமனுஜர் அவரை அணுகும் போது சொல்லிக்கொடுக்க ஒப்புகொண்டு, ராமானுஜருக்கு
ஓம் நமோ நாராயணா என்ற எட்டு எழுத்து மந்திரம் சொல்லிக்கொடுக்கிறார்,

இந்த மந்திரத்தை கேட்டதால், வைகுண்டத்தில் உனக்கு நிச்சயம் இடம் உண்டு ஆனால் இந்த எட்டு எழுத்து மந்திரத்தை நல்ல பார்பனர் தவிர தகுதி அற்ற வேறு யாருக்காவது சொன்னால் தீராத நரகதண்டனை அனுபவிக்க நேரிடும் என்று
எச்சரிக்கையும் செய்து அனுப்புகிறார்.

மறுநாள் அதிகாலையில், முதல் வேலையாக, கொஷ்டிபுரம் பெருமாள் கோயில் மதில் சுவற்றின் மீது ஏறி நின்றுகொண்ட ராமனுஜர், அங்கே சென்ற எல்லா மக்களையும் கூவி அழைத்து, எல்லோரும் இங்கே வாருங்கள் நான் இப்போது உங்கள் எல்லோருக்கும் எட்டு எழுத்து மந்திரம் ஒன்றை
உபதேசம் செய்கிறேன், இதை காதால் கேட்டாலே உங்கள் எல்லோருக்கும் வைகுண்டத்தில் இடம் உண்டு, என்று சொல்லி அங்கே குழுமியிருந்த எல்லோருக்கும் அந்த மந்திரத்தை உபதேசம் செய்கிறார்.
மற்ற பார்பனர் தங்களை கோயிலுக்கு உள்ளேயே விட மறுக்கும் போது, இவர் நம்மை அழைத்து மந்திர உபதேசமே செய்கிறாரே என்று மகிழ்ந்த மக்கள் எல்லோரும் அவர் பின் அணிசேர்ந்து அவரையே தங்கள் குருவாக ஏற்கின்றனர்.
அப்போது அங்கே வந்த கோஷ்டிபூரனர், நான் அவ்வளவு சொல்லியும் இப்படி செய்து பாவத்தை தேடிக்கொண்டாயே, நீ நரகத்தில் இருந்து மீளவே முடியாது என்று சொன்னார். அதற்கு ராமானுஜர், எட்டு எழுத்து மந்திரம் கேட்டதால் இத்தனை மக்கள் புனிதம் அடைந்து வைகுண்டம் செல்வார்கள் என்றால்,
நான் ஒருவன் நிரந்தரமாக நரகத்தில் வாழ தயாராகவே இருக்கிறேன் என்றார்.

தான் செய்வது பார்பனிய எதிர்ப்பு என்று அறிந்தே செய்தவர் ராமானுஜர், அதனாலேயே, அவரை நாம் இந்து மதத்தில் புரட்சி செய்த மகான் என்று சொல்லலாம்.
இந்த நிகழ்வுக்கு பிறகு அவரின் புகழ் மக்களிடையே பரவத்தொடங்கியது, அது பெரும் பாலும் சைவமதம் சார்ந்த அத்வைத கொள்கை கொண்ட சக பார்பனருக்கு பிடிக்கவில்லை, எனவே அவர்கள் ஒன்று திரண்டு, அன்றைய சோழமன்னனான முதலாம் குலோத்துங்கனிடம், சென்று ராமானுஜர்
சக்கரவர்த்தி பல தலைமுறைகளாக பின்பற்றிவரும் சைவமதத்துக்கு, விரோதமாக ராமானுஜர் செயல்படுகிறார், மக்களை நிம்மதியாக சைவமதத்தை பின்பற்ற விடாமல் இடையூறு செய்கிறார் என்று பழிசுமத்தினர்.
முதல் குலோத்துங்கனும், ராமானுஜரை கைது செய்ய உத்தரவிட்டு, அவரை பின்பற்றிய எல்லோரையும் மறுபடியும் சைவமதம் திரும்ப சொல்லி சட்டமியற்றுகிறான், உச்சகட்டமாக, சிதம்பரத்தில் இருந்த கோவிந்தராஜ பெருமாள் சிலையை தூக்கி கடலில் போடுகிறான்,ஸ்ரீரங்கம் கோயிலை நிரந்தரமாக மூடும்படி உத்தரவிடுகிறான்
ராமனுஜர் தன் சில சீடர்களுடன் தலைமறைவாகிறார். இந்த சம்பங்களையே நாம் கமலகாசனின் தசாவதாரம் திரைப்படத்தில் கண்ட ஆரம்ப காட்சிகள். இதில் கமலகாசன் சொல்லாமல் விட்ட சேதி நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய சேதி என்னவென்றால்.
ராமானுஜர் ஏற்படுத்திய இந்த மதப்புரட்சிக்கு எதிராக இருந்தவர்கள் எல்லோரும், உயர்சாதி இந்துக்களாக தங்களை நிறுவிக்கொண்ட சைவமத பார்பனர், ராமானுஜரின் பின்னால் அணிசேர்ந்தது, தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்களை கொண்டே தன் கொள்கைகளை பரப்பினார்,
அவரின் பின்னால் தங்களுக்கு மத விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் மக்கள் அவர் பின்னால் சேர்ந்தனர். அந்த காலகட்டத்தில் சைவமத பார்பனர் செய்தது வைணவ எதிர்ப்பு அல்ல, ஏனென்றால் ராமானுஜருக்கு முன்பே ஸ்ரீரங்கத்தில் வைணவ வழிபாடும் இருந்த்தது, குலோத்துங்கனும் இருந்தான்,
ஆனால் ராமானுஜர் எல்லா தரப்பு மக்களையும் கோயிலுக்குள்ளே கொண்டுவந்தது தான் பார்பனருக்கு பிடிக்காமல், தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுக்கவே இந்த மத எழுச்சியை, வைணவ சைவ மத எதிர்ப்பாக திரித்து சோழனின் துணையுடன் ஸ்ரீரங்கம் கோயிலையே இழுத்து மூடும் படி செய்தனர்.
இந்த காலகட்டத்தில் இந்த பிரச்சனை மிகப்பெரிய மதக்கலவரவமாக மாறி ராமானுஜரை பின்பற்றியவர்கள், பார்க்கும் இடங்களில் எல்லாம் அடித்து துவைத்து கொலை செய்யப்பட்டனர். ராமானுஜர் மூலம் அணிவிக்கப்பட்ட பூணூல்கள் அறுத்து எறியப்பட்டன,
குடுமிகள் மழிக்கப்பட்டன, வலுக்காட்டயமாக அவர்களின் வழிபாட்டு இடங்களில் இருந்து துரத்தப்பட்டனர், இவையாவும் சைவ பார்பனர் மூலம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அவர்களின் ஒரே பிரச்சனை ராமானுஜரின் இந்த புதிய முறையால் எல்லோரும் வேதம் படிக்கிறார்கள். எல்லோரும் பூணூல் போடுகிறார்கள் என்பதே, அதனாலேயே முதலாம் குலோத்துங்கன் காலத்தில், இந்த ஸ்ரீவைஷ்ணவர் எனப்படும் தென்கலை வைணவர்களின் மீது மதகலவரமும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டது.
பல சாதியினர் ஒன்றாக சேர்ந்து உருவாகிய மதம் இந்த தென்கலை வைணவர்கள் என்பதாலேயே, இன்றும் மற்ற பார்பனர், இந்த தென்கலை அய்யங்கார்களிடம் திருமண உறவு வைத்துகொள்வதிலை. ஆனால் இதில் சோகமான விஷயம் என்னவென்றால்,
ராமானுஜர் காலத்துக்கு பின் இவர்கள் தாங்களும் பார்பனர் மற்றவர்கள் கீழ் சாதியினர் என்று ஸ்ரீவைஷ்ணவத்தின் அடிப்படை தத்துவத்தையே மாற்றி நால் வருண மனு ஸ்மிரிதியை தூக்கிபிடிக்கத்தொடங்கியது தான்.
இந்த காலகட்டத்தில் தலைமறைவான ராமானுஜர் கர்நாடக பகுதியை ஆண்ட ஹோய்சால மன்னர்களின் நாட்டுக்கு சென்றுவிட்டார்.

அப்போது அதிர்ஷ்டம் அவரது பக்கம், விசிஷ்டாத்வைத தத்துவ குருவான யமுனாச்சாரியா என்பவர் பல நாட்களாக தன் குருகுலத்தை தலைமை ஏற்று நடத்த வரும்படி ராமானுஜரை அழைத்து கொண்டிருந்தார்
அதனால் அங்கே செல்ல முடிவுசெய்து அங்கே ராமனுஜர் செல்லவும் யமுனாச்சாரியா இறப்பதும் ஒரேநேரத்தில் நடக்கிறது. அதன் மூலம் ஏற்கனவே இருந்த தத்துவமான விசிஷ்டாத்வைதம் மேலும் ராமானுஜரால் புகழ் பெறுகிறது.
இந்த காலகட்டத்தில் அவர் கர்நாடகத்தில் பல வைணவ கோயில்களை மடங்களை நிறுவுகிறார். இன்று மிகவும் புகழ் பெற்ற திருப்பதி கோயிலை நிர்மானம் செய்கிறார். (இதை பற்றி மேலும் அறிய திருப்பதி பற்றிய எனது ஐந்து பகுதி பதிவுகளை blog-இல் காணலாம்)
வேதங்கள் சிறந்தது என்றால் அது ஏன் சமஸ்கிருதத்தில் இருக்கவேண்டும், எல்லோரும் படிக்கும் படி தமிழில் அல்லவா இருக்கவேண்டும் என்று சொன்னார். வேதாந்திர சூத்திரம் என்ற நூலை எழுதினர், அது ஸ்ரீபாஷியம் என்றும் அறியப்படும்.

இன்று தென்கலை பெருமாள் கோயில்களில் பாடப்படும்
நாலாயிர திவ்யபிரபந்தங்களை தொகுக்கச்செய்தார்.

குலோத்துங்க சோழன் காலத்துக்கு பின் ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர், மீண்டும் ஸ்ரீரங்கன் கோயிலை திறந்தார், கடலில் வீசப்பட்ட கோவிண்டராஜபெருமாள் சிலையை மீட்டு எடுத்து சிதம்பரத்தில் மீண்டும் நிறுவினார். .
இன்று பெருமாளின் திவ்யதேசங்கள் என்று சொல்லப்படும் பல கோயில்களை நிர்மாணம் செய்தார். இவர் வழி வந்தவர்களே பன்னிரு ஆழ்வார்கள் என்று அழைக்கப்படுபவர்கள், ராமானுஜராலே தான் தமிழ்நாட்டு தென்கலை வைணவ கோயில்களில் பெரிய அளவில் பூசைகளில் தமிழ் பயன்படுத்தபடுகிறது
விசிஷ்டாத்வைதம் தத்துவம் என்றால் பெரிதாக ஒன்றுமில்லை. கடவுள் என்பது பரமாத்தமா, மனிதர்கள் ஜீவாத்மா எனப்படும், ஜீவாத்மா, கடவுளிடம் இடைவிடாத பக்தியோடு இருந்தாலே போதும் அது முக்தி எனப்படும் பரமாத்தமாவிடம் போய் சேர்ந்துவிடும் என்பது தான்.
இதையே யாருக்குமே புரியாதவாறு சொல்லும் வேறு ஒரு வெர்ஷன் உண்டு அதை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் ஏதாவது கதாகாலேட்சபம் சென்றீர்கள் என்றால் ஒரு நாமதாரி பார்பனன் யாருக்குமே புரியாதவாறு ஒரு மூணு நாள் உபன்யாசம் செய்வான் கேட்டு குழப்பிகொள்ளுங்கள்.
ராமனுஜர் எந்த புத்தங்கள் எழுதினார் எந்த கோயில்கள் எல்லாம் புனர்கிர்மானம் செய்தார் என்று என் எழுவில்லை என்று கேட்காதீர்கள், அவை எல்லாம் நீங்கள் இணையத்தில் தேடிக்கொள்ளலாம், மேலும் இங்கு நான் மத வரலாறு எழுத வரவில்லை, மதத்தில் உள்ள புரட்டுகளை பற்றி எழுதவே வந்துள்ளேன்
ராமானுஜர் பிறப்பால் ஒரு பார்பனர் என்பதை தாண்டி மதத்தில் பெரிய புரட்சி செய்தார், ஆனால் இறைவனின் முன் அனைவரும் சமம் என்ற அவரது அடிப்படை கொள்கை அவரோடு சேர்த்து புதைக்கப்பட்டதே காலத்தின் கோலம்.

#பயி

More from All

You May Also Like