நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்று சொல்லப்பட்டது உத்திர பிரதேசத்தின் அமேதி தொகுதி. சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி பின்னர் ராகுல் காந்தி என்று தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் வென்ற தொகுதி அது. ஆனால் இப்போது யார் அந்த தொகுதி எம்பி?

2014 ல் பிஜேபி ஸ்மிரிதி இரானி என்ற நடிகையை அங்கு ராகுல் காந்திக்கு எதிராக களம் இறக்கியது. அந்த தொகுதிக்கு தொடர்பே இல்லாத நபர். 2014 ல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் ராகுல்காந்தியிடம் தோற்றார். ஆனால் அதன்பின் அமேதி தொகுதியை விட்டு போகவில்லை.
2019 தேர்தலின் போது ராகுல்காந்திக்கு தோல்வியை உறுதி செய்யும் வகையில் இருந்தது ஸ்மிரிதியின் தேர்தல் தயாரிப்புகள் ராகுல்காந்தி கேரள மாநிலத்திலும் போட்டியிட வேண்டி வந்தது. 2014 முதல் 2019 வரை ராகுல் காந்தியை தோற்கடிப்பது மட்டுமே ஸ்மிரிதி யின் ஒரே நோக்கமாக இருந்தது.
2019ல் அமேதி தொகுதியில் ராகுல் ஸ்மிரிதியிடம் தோற்றார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கோட்டை என்று சொல்லப்பட்ட அமேதி முதன் முதலாக பிஜேபி யிடன் வீழ்ந்தது. காரணம் ஸ்மிரிதி யின் 5 ஆண்டு உழைப்பு.
ஒரு தொகுதியில் வேட்பாளரை எப்படி இறக்கி வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் பிஜேபிக்கு இணை இன்றைய தேதியில் இந்தியாவில் கிடையாது. இதை மற்ற கட்சிகள் அங்கீகரிப்பது இல்லை. அதனால் தான் ஒவ்வொரு மாநிலமாக பிஜேபியின் கரம் வலுப்பெற்று வருகிறது.
ஒரு உதாரணத்திற்கு இங்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமோ இல்லையோ என்ற ஐயம் இருந்தாலும் நான்கு மாதங்களுக்கு முன்பே தங்கள் தேர்தல் பரப்புரை வேலைகளை செய்யத் தொடங்கினர் நடிகைகள் குஷ்புவும் கவுதமியும். இப்போது அவர்களுக்கு வாய்ப்பு இல்லை.
ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்த தொகுதியில் இனிமேல் வேலை செய்வதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. ஸ்மிரிதி பின்பற்றிய அதே பாணி அரசியல். இதை தமிழக கட்சிகள் எவ்வளவு தூரம் உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் கூட இல்லை, வேட்பாளர்கள் யார் என்று தெரியவில்லை.
பிஜேபி இப்போது தான் அடிமட்டத்தில் வேலை செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்களது தேர்தல் இப்போது இல்லை. இன்னும் 10 வருடங்கள் ஆகும். ஆனால் அப்போது இன்று இருக்கும் பல தமிழக கட்சிகள் காணாமல் போய் இருக்கும்.
90 களில் பிஜேபி வட இந்திய மாநிலங்களில் கொடுத்த உழைப்பு மிகப் பெரியது. அதற்கு இணையான உழைப்பை தமிழக கட்சிகள் செய்ய வில்லை என்றால் அடுத்த பத்து ஆண்டுகளில் இங்கு தாமரை மலரும். வெறும் வாயில் பெரியார் மண் என்பது அதிக நாட்கள் தாக்குப் பிடிக்காது.
இன்று குஷ்புவும் கவுதமியும் நகைப்புக்கு உள்ளாகிறார்கள். ஆனால் அவர்களை வரும் காலத்தில் எம்.எல். ஏவோ எம்பியாகவோ பிஜேபி ஆக்கும். தமிழக கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் தேர்தலுக்கு பிறகு தான் வேலைகள் அதிகமாக இருக்கிறது, அதை சரி வர செய்யாத பட்சத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.

More from All

You May Also Like

🌺कैसे बने गरुड़ भगवान विष्णु के वाहन और क्यों दो भागों में फटी होती है नागों की जिह्वा🌺

महर्षि कश्यप की तेरह पत्नियां थीं।लेकिन विनता व कद्रु नामक अपनी दो पत्नियों से उन्हे विशेष लगाव था।एक दिन महर्षि आनन्दभाव में बैठे थे कि तभी वे दोनों उनके समीप आकर उनके पैर दबाने लगी।


प्रसन्न होकर महर्षि कश्यप बोले,"मुझे तुम दोनों से विशेष लगाव है, इसलिए यदि तुम्हारी कोई विशेष इच्छा हो तो मुझे बताओ। मैं उसे अवश्य पूरा करूंगा ।"

कद्रू बोली,"स्वामी! मेरी इच्छा है कि मैं हज़ार पुत्रों की मां बनूंगी।"
विनता बोली,"स्वामी! मुझे केवल एक पुत्र की मां बनना है जो इतना बलवान हो की कद्रू के हज़ार पुत्रों पर भारी पड़े।"
महर्षि बोले,"शीघ्र ही मैं यज्ञ करूंगा और यज्ञ के उपरांत तुम दोनो की इच्छाएं अवश्य पूर्ण होंगी"।


महर्षि ने यज्ञ किया,विनता व कद्रू को आशीर्वाद देकर तपस्या करने चले गए। कुछ काल पश्चात कद्रू ने हज़ार अंडों से काले सर्पों को जन्म दिया व विनता ने एक अंडे से तेजस्वी बालक को जन्म दिया जिसका नाम गरूड़ रखा।जैसे जैसे समय बीता गरुड़ बलवान होता गया और कद्रू के पुत्रों पर भारी पड़ने लगा


परिणामस्वरूप दिन प्रतिदिन कद्रू व विनता के सम्बंधों में कटुता बढ़ती गयी।एकदिन जब दोनो भ्रमण कर रहीं थी तब कद्रू ने दूर खड़े सफेद घोड़े को देख कर कहा,"बता सकती हो विनता!दूर खड़ा वो घोड़ा किस रंग का है?"
विनता बोली,"सफेद रंग का"।
तो कद्रू बोली,"शर्त लगाती हो? इसकी पूँछ तो काली है"।