Anexcommie Authors Srinivasan1904

7 days 30 days All time Recent Popular
#அன்புக்கு_விலையேது

தனியாக கதை சொல்லி கொஞ்ச நாள் ஆகிவிட்டதோ? இதோ ஒரு கதை... அந்த கதை ஞாபகம் வந்ததன் பின்னணி....

போனவாரம் என் மனைவி எங்கள் பேரனிடம் குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டாள். என் பேரனும் போய் குடிதண்ணீர் எடுத்து வராமல்

டம்ளரில் குழாய் தண்ணீரை பிடித்து கொண்டு வந்தான். அதை அப்படியே குடித்து விட்டு "சமத்துடா கொழந்த... அடுத்த வாட்டி யாராவது குடிக்க தண்ணீர் கேட்டால் அதோ அந்த குடத்தில் இருந்து தான் எடுத்து கொடுக்கணும். சரியா?" என்று சொன்னாள்.

இதைப் பார்த்து என் மகள், "ஏம்மா... அந்த தண்ணிய குடிச்ச?" என்று கொஞ்சம் கடிந்து கொண்டாள்.

"கொழந்த ஶ்ரீராம் எவ்வளவு பாசமா... ஆசையா கொண்டு வந்தான் தெரியுமா? அவனை disappoint பண்ணக்கூடாது. அதுக்கு தான் ஒண்ணும் சொல்லாமல் குடிச்சேன்" என்றாள்.

ஆஹா.... பாட்டி சொன்ன கதை ஒன்று ஞாபகம் வந்தது... அது....

ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான். ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.

குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.

நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்று அடைந்தவன், அரண்மனைக்கு சென்று
கதை சொல்லி வெகுநாள் ஆயிற்றே!!! இதோ ஒரு கதை

வடநாட்டில் காசிக்குச் செல்லும் வழியில் சக்கிலியன் ஒருவன் வசித்து வந்தான். அவன் திருமணமாகி நெடு நாளாய் புத்திரன் இல்லாமல் இருந்தான். சக்கிலியன் ஒரு பெரியவரிடம் தன் குறையைக் கூறினான்.

அவர் தர்மம் செய்தால் அதன் பயனாக புத்திரன் உண்டாவான் என தேற்றினார்.

சக்கிலியன் எந்த முறையில் தர்மம் செய்ய வேண்டுமென்று கேட்டான். அக்காலம் கோடை காலம். அவ் வழியாக காசிக்குப் போகும் ஓர் அந்தணனுக்கு ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தானமாகக் கொடுத்தால்

அவர்களுடைய ஆசியால் புத்திரன் உண்டாகும் என்றார்.

தான் தாழ்த்தப்பட்டவன் ஆதலால் அந்தணனுக்கு எவ்வாறு தானம் செய்ய முடியும் என சிந்தித்தான்.

ஒருநாள் ஒரு குடை, ஒரு மிதியடி, ஒரு விசிறி இம் மூன்றையும் தயாரித்து எதிரிலுள்ள மரத்தடியில் வைத்து விட்டு தன் தொழிலில் ஈடுபட்டான்.

பக்தியில் மேம்பட்ட அந்தணர் ஒருவர் தன் இறுதிக் காலம் நெருங்குவதற்குள் காசிக்குச் சென்று வர வேண்டுமென்ற வைராக்கியத்தோடு கால்நடையாகப் புறப்பட்டார்.

அது சமயம் வெயில் காலமாதலால் வெப்பத்தால் துடிதுடித்துச் சென்று கொண்டிருந்தார்.

வழியில் ஒரு மரத்தடியில் வைத்திருந்த குடை, செருப்பு, விசிறி இம் மூன்றையும் கண்டார். அதை மகிழ்ச்சியோடு எடுத்துக் கொண்டு அம் மூன்றையும் வைத்தவனை வாழ்த்திக் கொண்டே சென்றார்.
#தினமும்_கங்கா_ஸ்னானம்_செய்வது_எப்படி?

#குளிக்கும்_முறை (அகத்தியர் கூற்று)

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம்.

மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).

தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும். #குளிக்கும்_முன்_ஒரு_குவளை_தண்ணீரில் #மோதிரவிரலால்__ஓம்__என்று_த்யானம் #செய்து_எழுதுங்கள். #அந்த_நீர் #அப்போது_முதல்_கங்கை_நீராக_மாறிவிடும்.

ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும். குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.

#அக்னி_எப்போதும்_மேல்நோக்கியே #பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.

நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு.

காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.

தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும்.