Anexcommie Authors Chittukuruvi

7 days 30 days All time Recent Popular
Sharing a WA forward//

#மாசிமகம்-
#ஸ்ரீலலிதாஜயந்தி!

மாசிமாதம்,பௌர்ணமி திதி, மக நக்ஷத்ரம் ஆகிய மூன்றும் ஒன்று சேரும் நன்நாள் தான் மாசிமகம்.

ஸ்ரீவித்யா மார்க்கத்தில் அம்பாளை;
1) தாரா 2) மாதங்கி 3) சின்ன மஸ்தா 4)பகளாமுகீ 5) தூமாவதீ
6) புவனேஸ்வரி 7)காளி 8)த்ரிபுர பைரவி 9)கமலா 10)லலிதா என்பதாக பத்துவித ஸ்வரூபமாக ஆராதிக்கிறார்கள்.

இவ்விதம் 10 அவதாரங்கள் அம்பாளுக்கு ஏற்பட்டதாக
புராணங்கள் கூறுகின்றன.

இந்த 10 விதமான தேவி
அவதாரங்களுக்குள் ஸ்ரீ லலிதா (த்ரிபுர ஸுந்தரி) என்னும் அவதாரமானது மாசி மாதம் பௌர்ணமியில் தான் நிகழ்ந்தது. ஆகவே ஸ்ரீ லலிதா ஜயந்தியாகவும்
அன்றைய நாள் கொண்டாடப்படுகிறது.

அன்று மாலை ஸ்ரீ லலிதா தேவியின் விக்ரஹம் அல்லது படத்தை நன்கு அலங்கரித்து வைத்து, ஸ்ரீ லலிதா
அஷ்டோத்தரத்தால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல்
நிவேதனம் செய்து, பூஜை செய்து, 9 ஸுவாஸினிகளுக்காவது தாம்பூலம் தரவேண்டும்.

மேலும் அன்று மாலை அனைவரும் சேர்ந்தோ-தனித்தோ-
சந்திரகிரணங்கள் உடலில் படுமாறு அமர்ந்து கொண்டு, சந்திரனின் பிம்பத்தில் ஸ்ரீ லலிதா தேவியை த்யானம் செய்து கொண்டு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது மிகச்சிறப்பான
பலங்களைத்தரும்.