Authors Sriram

7 days 30 days All time Recent Popular
ஏத்தவேழுலகுங் கொண்டகோலக்

கூத்தனை, குருகூர்ச்சடகோபன்சொல்,

வாய்த்தவாயிரத்துள் ளிவைபத்துடன்,

ஏத்தவல்லவர்க் கில்லையோர்ஊனமே. (2.2.11)

(நம்மாழ்வார் - திருவாய்மொழி - இரண்டாம் பத்து - இரண்டாந் திருமொழி)


Eththa Ezulakum konda* kOlak
kooththanai,* kurukoorchchadakOpan_chol,*
vaayththa aayiraththuL* ivaipaththudan,*
Eththavallavarkku* illaiyOr _oonamE. (2.2.11)

(Swamy Nammazhwar in THIRUVAIMOZHI)

Meaning:

அனைவரும் வியந்து போற்றித் துதிக்க, அனைத்து உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதில் அளந்து கொண்ட அழகிய கூத்தனான எம்பெருமானைக் குறித்து,

குருகூரிலே அவதரித்த ஸ்ரீசடகோபன் நம்மாழ்வார் அருளிச் செய்த,

உலகுக்கு மஹா பாக்யமாகக் கிடைத்த
ஆயிரம் பாசுரங்களில் அமைந்த இந்தப் பத்து பாசுரங்களையும்,

பொருளுணர்ந்து பாடி, எம்பெருமானைத் துதிக்க வல்லவர்களுக்கு, எந்நாளும் ஒரு குறைவுமில்லை.

The Thrivikraman is the One who meassured the entire Universe in one step and was hailed for such an act.