கர்ம வினைகள் நீக்கும் தானங்கள் !!!

அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம்.

பொருட்கள் - தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

அன்னம் - வறுமையும், கடனும் நீங்கும்

துணி - ஆயுள் அதிகமாகும்

தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்

தீபம் - கண்பார்வை தெளிவாகும்
அரிசி - பாவங்களை போக்கும்

நெய் - நோய்களை போக்கும்

பால் - துக்கம் நீங்கும்

தயிர் - இந்திரிய சுகம் பெருகும்

பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்
தங்கம் - குடும்ப தோஷங்களை நீக்கும்

வெள்ளி - மனக்கவலை நீங்கும்

பசு - ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்

தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்
நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்

பூமி தானம் - ஈஸ்வர தரிசனம் உண்டாகும்

மேற்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ள பொருட்களை தானம் செய்வது சிறப்பு.
சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் தானம் செய்வது சிரமம். அவர்கள் கவலை கொள்ள வேண்டாம்.

இவற்றைக் காட்டிலும் சிறந்த தானம் ஒன்று உண்டு. அது என்ன?
அது தான் பசுவிற்கு உணவளிப்பது. கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது.

பசுவிற்கு என்ன பொருட்கள் தானமாக தரலாம் என்ற கேள்விக்கு பதில் இதோ :-
பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம்.

ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம்.

அன்னதானம் செய்யலாம். அதாவது பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம்.
பழங்களை அளிக்கலாம். பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது.

ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.

இதை விட சிறந்த ஒரு பொருள் ஒன்று உண்டு. அது தான் அரிசியும், வெல்லமும்.
இவ்விரண்டையும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.
ஆனால், இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

"கோமாதா" என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர்.
அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா?
முடியும்.

பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம்.
எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

தினமும் முடியாமல் போனாலும், அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்து நமது கர்ம வினைகளை போக்குவோம்.

அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும்.
நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்.

பசுவிற்கு உணவளித்தலே உலகின் மிகப் பெரிய தானம் ஆகும்.

இவ்வாறு செய்யும் தருணம் மிகப் பெரிய புண்ணியம் செய்தவர்களுக்கே கிட்டும்.
அமாவாசை நாளில் நமது முன்னோர்களை வழிபடும் போது, செய்யப்படும் படையல் பொருள்களை (சாதம், வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு, வடை, பாயசம் முதலியன) கன்றுடன் இருக்கும் பசுவிற்கு தானமாக அளித்துக் கொண்டே வாருங்கள்.
தங்களின் வாழ்வில் எல்லா வளங்களும் தானாகவே வந்து சேரும். அனைத்து கர்ம வினைகளும் தீரும்.

ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் பசுவிற்கு உணவளிப்போம்.

நமது கர்ம வினைகளை தூள் தூளாக்குவோம்.
Feed the cows generously to get relief from our Karma.

If not daily, atleast on the day of Amavasya, make it your routine to feed a cow which is equivalent to doing puja to all the gods.

More from sriram

திருநாங்கூர் 11 கருட சேவை விளக்கம்:

-------------------------------------------------
11 திவ்யதேச ௭ம்பெ௫மான்களையும் ஒரே இடத்திலே கருட சேவையில் ஆழ்வா௫டன் ஸேவிக்கலாம்.

பதினொரு பெருமாள்களையும் ஒருங்கே தரிசிக்கும் பெரும் பாக்கியம்!


குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும்ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமமே.

திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்
தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
அருள் நடந்து இவ் வேழுலகத் தவர்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம்
என்று ஆழ்வார்களால் போற்றப்படும் திருநாங்கூர் திவ்ய தேசத்தில்

பெருமாளை பெரிய திருவடியான கருட வாகனத்தில் சேவித்தால்
மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்..

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் 108 வைணவ தலங்களில்
11 கோயில்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் ஆண்டுதோறும் கருட சேவை உற்சவம் விமரிசையாக நடைபெறும்.
Sri Ananthalwar, Sri Chakrathalwar and Sri Garudalwar.

"ஸ்ரீ சக்கரம்" என்னும் "ஸ்ரீ சுதர்ஸனம்" எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்!

அவர் தம் வலது திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.


"ஸ்ரீ அனந்தன்" என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’.

ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன்.

பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.

"ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார்" என இவர்கள் மூவர்கள் மட்டுமே, பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும் - ஆழ்வார் என்ற அடைமொழி.

நாராயணா ஹரி நாராயணா!

More from All

You May Also Like