Anexcommie Authors PALRAJ T

7 days 30 days All time Recent Popular
ராவணனை அழித்த பிறகு,போர்க்களத்தில் ஸ்ரீ ராமபிரான் ஓய்வாக தரையை நோக்கியபடி அமர்ந்திருந்தார்...!!

அப்போது ஒரு பெண்ணின் நிழல் தெரிந்தது...!!
அந்த நிழலுக்குச் சொந்தக்காரியான பெண்,
அவரது திருப்பாதங்களைத் தொட முயற்சிப்பதை,

ஸ்ரீராமபிரான்... நிழலின் அசைவின் மூலம் புரிந்து கொண்டார்...!!


உடனே தனது காலை உள்ளிழுத்துக் கொண்டார்....!!

“நீ யாரம்மா?” என்றார்....!!
“நான் ராவணனின் மனைவி மண்டோதரி....!!

என் கணவரை யாராலும் வெல்ல முடியாது என இருமாந்திருந்தேன்....!!
ஆனால்,
அவரையே ஒருவன் கொன்று விட்டான் என்றால்,

அவனிடம் ஏதோ உயர்ந்த குணம் இருக்க வேண்டும் என நினைத்தேன்....!!

மேலும்.
சத்திரிய குல தர்மப்படி,
கணவனை_இழந்த பெண்ணை வெற்றி பெற்றவன் ,
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.....!!

ஆனால் நீ என்னிடம் வரவில்லை....!!
ஆச்சரியப்பட்டேன்.....!!

இங்கே நீ ,
என் நிழல் உன் மீது படுவதைக் கூட விரும்பவில்லை என்னும் போது, உன் சிறந்த குணத்தை என்னவென்பேன்......!

என் கணவரிடம் கூட இத்தகைய பண்பு இல்லை

ரகு குலத்தில் உதித்த ராமன் ,
மனிதன் அல்ல.....!!
உலகைக் காக்கும் பரம்பொருள்...!!
விஸ்வரூபன்.....!!
அவனது திருநாமம் எல்லாப் பாவங்களையும் நொடிப் பொழுதில் போக்கவல்லது.....!!
அவன் வேதத்தின் சாரம்.....!!

ராமன் சாட்சாத் தெய்வ வடிவம்....!!

அவனிடம் பகையை ஒழித்து சீதையை விட்டுவிடுங்கள்’ என்று மன்றாடினேன்.....!!

அவர் கேட்கவில்லை.....!!
உன் வெற்றிக்கு காரணம்,
என் கணவரிடம் இல்லாத ஒரு நற்குணம் உங்களிடத்தில் இருந்தது தான்....!!

அதுதான் தங்களின் ஏகபத்தினி விரதத்தன்மை.....!!
அதனால் தான் நீ வென்றாய்,” என்றாள்.....!!