Authors Lakshmi

7 days 30 days All time Recent Popular
#சொல்_காக்கும்_ரங்கன்.

ஸ்ரீ ரங்கத்தில் உலகம் போற்றும் ஆசார்யன் ஸ்ரீமத் ராமானுஜர், ஒரு சமயம் திருக்கோவிலை வலம் வந்து கொண்டிருந்தார். அப்போது மடப்பள்ளியிலிருந்து ஏதோ சச்சரவு போன்று சத்தம் கேட்டது. எம்பெருமானார் மெதுவாக சத்தம் வரும் இடத்திற்குச் சென்றார். அவரைக் கண்டதும் அனைவரும்

வணங்கினர்.
மடப்பள்ளியில் இருந்தவரைப் பார்த்து
என்ன விஷயம்?
என்று வினவினார்.
அவர் இன்னொருவரைக் காட்டிச் சொன்னார்
இவர் நமது கோவிலில் கைங்கர்யம் செய்பவர். இவ்வளவு நாட்களாக இவரது கைங்கர்யத்திற்காக ஒரு பட்டை ப்ரசாதம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது அதிகம் வேண்டும் என்று கேட்கிறார்.

அப்படியெல்லாம் கொடுப்பதற்கு நமக்கு அதிகாரம் இல்லை.
எம்பெருமானார் திரும்பி அவரைப் பார்த்தார்.
அவர் தெண்டனிட்டுவிட்டுச் சொன்னார்.
ஸ்வாமி, அவர் சொல்றது உண்மதான். நான் ப்ரும்மச்சாரியாய் இருந்த வரையில் எனக்கு ஒரு பட்டை ப்ரசாதம் போதுமாய் இருந்தது. இப்போது எனக்குக் கல்யாணமாகிடுச்சு.

கோவில் வேலைக்கே நேரம் சரியாப் போயிடுது. அதனால, நான் வேற வேலைக்கும் போகமுடியறதில்ல. ஒரு பட்டை ப்ரசாதம் என் குடும்பத்துக்குப் போதல. அதனால் கூட ஒரு பட்டை ப்ரசாதம் கிடைச்சா கொஞ்சம் கஷ்டப்படாம ஜீவனம் போகும் ஸ்வாமி. ஆனா, இவர் தரமுடியாதுன்னு சொல்றார்.
கோவிலின் பொதுவிதிகளை ஒருவருக்காக

மீறுவது சரியில்லை. ராமானுஜர் சற்று யோசித்தார்.
சரி, உனக்கு உள்ள இருக்கும் பெருமாள் மேல நம்பிக்கை இருக்கா?
இல்ல ஸ்வாமி,
தூக்கிவாரிப் போட்டது அனைவருக்கும்.
என்னப்பா, கோவில்ல கைங்கர்யம் பண்ற. பெருமாள்மேல் நம்பிக்கை இல்லைங்கற. எப்படிப்பா?
ஆமா ஸ்வாமி, எனக்குப் பெருமாள் மேல நம்பிக்கை