ஏன் மோடி வேண்டும்?-
பிரதமர் மோடி குறித்து பிரணாப் முகர்ஜி சொன்ன வியப்பூட்டும் தகவல்
ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு விழாவில் பிரணாப் அவர்கள் பங்கேற்பது குறித்த பேட்டி காண சென்றிருந்தது.
பேட்டியின் போது காங்கிரஸின் மூத்த தலைவர், முன்னாள் குடியரசு தலைவராகிய பிரணாப் முகர்ஜியிடம் பிரதமர் மோடி குறித்து கேள்வி கேட்டது.
"நீங்கள் மத்திய அமைச்சராக இருந்த போது குஜராத் முதல்வராக மோடி இருந்தார். அடுத்து நீங்கள் குடியரசுத் தலைவராக இருந்த போது மோடி பிரதமராக இருந்தார்.
இந்த இரண்டு மோடியின் செயல்பாடுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்; தவிர, இப்போது நீங்கள் சாதாரண மனிதராக இருக்கும் நிலையில் பிரதமராக மோடியின் செயல்பாடு எப்படி இருக்கிறது."
இதுதான் கேள்வி...
"முதல்வராக, பிரதமராக, மோடியிடம் வித்தியாசம் ஏதும் இல்லை. முதல்வராக இருக்கும் போது மாநில வளர்ச்சிக்கு பாடுபட்டார்.. இப்போது இந்திய வளர்ச்சிக்கு கடுமையாக உழைக்கிறார்.
நான் மத்திய அமைச்சராக இருந்த பொழுது எனக்கு மிகவும் பிடித்த முதல்வராக மோடியே இருந்தார். காரணம் அவரிடம் எதையும் ஒருமுறை சொன்னால் போதும். உடனே அதை புரிந்து கொண்டுவிடுவார்!
குஜராத் வளர்ச்சிக்கு மத்திய அரசிடம் போராடி பல்வேறு திட்டங்களுக்கான தொகையை வாங்குவார்.