Authors M.SivaRajan

7 days 30 days All time Recent Popular
#முன்_ஜென்ம_வினைகள்_அகல

*முன் ஜென்ம தீவினைகள் நீங்க வழிபடவேண்டிய திருவாடானை திருக்கோயில்*

மதுரையிலிருந்து(100 கி.மீ) தொண்டி செல்லும் வழியில் திருவாடானை உள்ளது. சிவகங்கையில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ளது.


வருணனுடைய மகன் வாருணி.

ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான்.

முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

அப்போது வாருணியுடன் வந்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர்.

துர்வாச முனிவர் கோபத்துடன், “வாருணி! நீ வருணனின் மகனாக இருந்தும், பொருந்தாத காரியம் செய்து விட்டாய்.

எனவே பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்” என சாபமிட்டார்.

ஆடு+ஆனை என்பதால் இத்தலம் வடமொழியில் “அஜகஜபுரம்” ஆனது.

தன் தவறை உணர்ந்தான் வாருணி.

இவனது நிலை கண்ட மற்ற முனிவர்கள், சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது.

அத்தலத்து இறைவனை வழிபாடு செய்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று வாருணியிடம் கூறினர்.

அதன்படி வாருணியும் இத்தலத்தில் தன் பெயரால் குளம் அமைத்து தினமும் ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினார்.

இறைவனும் இவனது சாபம் நீக்கி, என்ன வரம் வேண்டும் எனக்கேட்க, “கலிகாலம் முடியும் வரை இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும்” என வரம் பெறுகிறான்.