MuraliAthreya Authors ⱽᵃʳˢʰᵃ

7 days 30 days All time Recent Popular
🌻சது ஸ்லோகி – ஸ்லோகம் 1
“காந்தஸ் தே புருஷோத்தம: பணிபதிச் சய்யாஸனம் வாஹநம்
வேதாத்மா விஹகேச்வரோ யவனிகா மாயா ஜகன்மோஹிநீ
ப்ரஹ்மேசாதி ஸுரவ்ரஜஸ் ஸதயிதஸ் த்வத் தாஸ தாஸீ கண:
ஸ்ரீரித்யேவ ச நாம தே பகவதி ப்ரூம: கதம் த்வாம் வயம்“
🙏🌻🙏


ஹே பகவதி! மஹாலக்ஷ்மி! உன்னை நாம் எப்படிச் சொல்லுவோம்! உனக்குக் கணவன் புருஷர்களில் சிறந்த நாராயணன்; ஸர்ப்பங்களில் சிறந்த ஆதிசேஷனோ படுக்கை, ஆசனம்; வேத ஸ்வரூபியான கருடாழ்வான் வாஹனம்; உலகத்தை மோஹிக்கும் மாயை உன்னை அறியவொட்டாமல் தடுக்கும் திரை;

தேவர்கள் குழு உனக்கு கைங்கர்யம் செய்பவர்கள்; உனக்குப் பெயரோ ஸ்ரீ என்று எல்லாச் சொல்லுக்கும் மேன்மையைத் தெரிவித்துக்கொண்டு முன் நிற்பது. இப்படி இவ்வளவு மஹிமை உள்ள உன்னை எவ்வாறு சொல்லுவது, புகழ்வது?

சது ஸ்லோகீ – 2
“யஸ்யாஸ்தே மஹிமானமாத்மான இவ த்வத் வல்லபோபி ப்ரபு:
நாலம் மாதும் இயத்தயா நிரவதிம் நித்யாநுகூலம் ஸ்வத:
தாம் த்வாம் தாஸ இதி ப்ரபன்ன இதி ச ஸ்தோஷ்யாம்யஹம் நிர்பயோ
லோகைகேச்வரி லோகநாத தயிதே தாந்தே! தயாம் தே விதந்“
@Grounded_Wisdom
@premaswaroopam
@MalolaNarasimha

எந்த உன்னுடைய இயற்கையாகவே உனக்கு நித்யாநுகூலமாகவும் எல்லையில்லாததுமான விபவத்தைத் தனக்குப்போல் உன் அன்புக்குரியவனான ஈஸ்வரனும் இவ்வளவு என்று அளவிடுவதற்குத் திறமையற்றவனாகிறானோ அப்படிப்பட்ட உன்னை, ‘அடியேன் தாஸன்’ என்றும் ‘சரணாகதன்’ என்றும் சொல்லி