#குலசேகரஆழ்வார் சேர மன்னரும் சந்திர குலத்தவருமான திருடவிரதற்கு மகனாக, திருவஞ்சிக்குளம் என்னும் இடத்தில் கலி 28வதான பரபவ வருடம் மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். இவர் பெருமாளின் மார்பில் இருக்கும் ஸ்ரீகௌஸ்துபத்தின் அம்சம் ஆவார்.
இவர் திருவேங்கடவர் அருளாலே அவர் மீது பக்தி அதிகரித்து அதை அனுபவித்துக் கொண்டே ராஜ்ஜியம் நடத்தினார். அவர் சேர நாட்டை தவிர சோழ பாண்டிய தேசத்தையும் வென்று ஆட்சி புரிந்தார். கொல்லிக்காவலன், கூடல்நாயகன், கோழைக்கோன் என்று வழங்கப்பட்டார். ராமபிரான் மேல் அளவுகடந்த அன்பினால் ஒருமுறை
இராமாயணம் கதை கேட்டுக் கொண்டிருக்கும்போது ராமன் 14,000அரக்கர்களோடு ஜனஸ்தானம் என்னும் இடத்தில் போரிடுவதை கேட்டு எப்படி தனி ஒருவன் மாய அரக்கர்களோடு போராடுவார் என்று தன் சைனியத்தைத் திரட்டிக் கொண்டு அவருக்கு உதவ கிளம்பிவிட்டார். உடனே கதை சொல்பவர் அத்தனை போரையும் வதம் செய்து வென்றார்
என்றதும் சமாதானம் அடைந்தார். அதே போன்று சீதையை ராவணன் அபகரித்து சென்றான் என்று கேட்டவுடன் திரும்பப் படையை திரட்டி கடற்கரை சென்று கடலை கடக்க ஆயத்தமானார். அப்பொழுது இராமபிரானே சீதா தேவியுடன் தோன்றி அவருக்குக் காட்சி அளித்து அவரை சமாதனப் படுத்தினார். கவலையில் ஆழ்ந்த அமைச்சர்கள் கூடி
இத்தகைய குழப்பங்களைத் தவிர்க்க என்ன செய்யலாம் என ஆலோசித்து இதற்கெல்லாம் வைணவ அடியாரோடு இவர் கொண்டிருக்கும் தொடர்பே காரணம் என்ற முடிவிற்கு வந்தனர். தொடர்பைத் துண்டிக்க ஓர் திட்டமும் தீட்டினர். அரண்மனையுள் அரசன் வணங்கும் பெருமாளின் திருவாபரணப் பெட்டியில் இருந்தவற்றுள் மிக அழகான