7 days 30 days All time Recent Popular
திருநாங்கூர் 11 கருட சேவை விளக்கம்:

-------------------------------------------------
11 திவ்யதேச ௭ம்பெ௫மான்களையும் ஒரே இடத்திலே கருட சேவையில் ஆழ்வா௫டன் ஸேவிக்கலாம்.

பதினொரு பெருமாள்களையும் ஒருங்கே தரிசிக்கும் பெரும் பாக்கியம்!


குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும்ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமமே.

திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திகழத்
தீவினைகள் போயகல அடியவர்கட் கென்றும்
அருள் நடந்து இவ் வேழுலகத் தவர்பணிய வானோர்
அமர்ந்தேத்த இருந்தவிடம்
என்று ஆழ்வார்களால் போற்றப்படும் திருநாங்கூர் திவ்ய தேசத்தில்

பெருமாளை பெரிய திருவடியான கருட வாகனத்தில் சேவித்தால்
மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்..

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் 108 வைணவ தலங்களில்
11 கோயில்கள் ஒரே பகுதியில் அமைந்துள்ள கோயில்களில் ஆண்டுதோறும் கருட சேவை உற்சவம் விமரிசையாக நடைபெறும்.
Nam Perumal, Srirangam, TN.
உள்ளத்தே யுறையும் மாலை உள்ளுவா னுணர்வொன் றில்லா

கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டேன்

உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று

வெள்கிப்போ யென்னுள் ளேநான் விலவறச் சிரித்திட் டேனே.


(தொண்டரடிப் பொடியாழ்வார் - திருமாலை - நான்காந் திருமொழி)

Meaning:

நாம் ஓரிடம் தேடி ஓட வேண்டாதபடி, நம் ஹ்ருதயத்திலுள்ளே எப்போதும் வந்து,

அனைவர் நெஞ்சத்துள்ளும் நித்யவாஸம் செய்கின்ற எம்பெருமானே! அரங்கா!

உன்னை நினைத்துக் கூடப் பார்க்க தகுதியும், அறிவுமில்லா மஹாபாபியான அடியேன்,

உன்னுடைய பரமபக்தன் போலே தோற்றம் கொண்டு,

“இவன் பரம பாகவதன், பரம பக்தன்” என்று காண்பவர்கள் எல்லோரும் வியந்து போற்றும் வண்ணம் சுற்றித் திரிகிறேன்.

"தொடையொத்த துவளமும், கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி” என்றபடி கைங்கர்ய வேஷங்களைப் போட்டுக் கொண்டு அலைகிறேன்.

இத்தனை செய்த போதிலும், " அடடா! யார் யார் என்னென்ன நினைக்கிறார்கள்?" என்று அவரவர் நெஞ்சினுள்ளே உறைந்து நின்று,

எல்லாருடைய நினைவையும் நீ நன்கு அறிந்து கொண்டு விடுவாயே!" என்று நினைத்துக் கொள்கையில்,

,அப்படி என்றால், என்னைப் பற்றியும், எனது கள்ள வேஷத்தைப் பற்றியும் உனக்கு நன்றாகத் தெரியுமே!
Sri Ananthalwar, Sri Chakrathalwar and Sri Garudalwar.

"ஸ்ரீ சக்கரம்" என்னும் "ஸ்ரீ சுதர்ஸனம்" எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்!

அவர் தம் வலது திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.


"ஸ்ரீ அனந்தன்" என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’.

ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன்.

பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.

"ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார்" என இவர்கள் மூவர்கள் மட்டுமே, பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும் - ஆழ்வார் என்ற அடைமொழி.

நாராயணா ஹரி நாராயணா!
Sri Nrusimhar, Keezhappavur, near Tirunelveli, TN.

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவில், கீழப்பாவூர், திருநெல்வேலி.
தல சிறப்புகள்
இந்தியாவில் உள்ள நரசிம்மர் கோவில்களில் அபூர்வமானதும், வேறெங்கும் காண இயலாத பல்வேறு சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் விளங்குகிறது.


தலம், மூர்த்தி, தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம்.

இந்தியாவில் மூன்று இடங்களில் தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் ஆலயம் உள்ளது.

ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி எனும் சிறு குன்றிலும் உள்ளது

மூன்றாவதாகக் கீழப்பாவூரில் மட்டுமே சமதளமான பகுதியில் 16 திருக்கரங்களுடன் அருள்பாலித்து வருகிறார்.

சுற்றிலும் வயல்கள், குளங்கள் நிறைந்து பசுமையாக உள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக ரிஷிகளுக்கு காட்சி கொடுத்தது மட்டுமின்றி, நிரந்தரமாகத் தங்கி இருப்பதும் இங்கு மட்டுமே.

இத்தலம் சுமார் 1,100 ஆண்டுகள் புராதனச் சிறப்புமிக்கதாகும்.

முதன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் திருத்தலத்தில்.

மீண்டும் அவதாரம் எடுத்த தலம் கீழப்பாவூர் ஆகும்.

தல வரலாறு

கிருதயுகத்தில் பிரகலாதனுக்காக திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழித்தார்.

சில நாழிகைகளே நீடித்திருந்த நரசிம்ம அவதாரத்தை காண காசிப முனிவர், நாரதர், வருணன், சுகோஷன் முனிவர் போன்றோர் விருப்பம் கொண்டு மகா விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்தனர்.